பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 நினைவுக் குமிழிகள்-2

தனன் தந்தபோது-கொணர்ந்து காட்டும்பொழுது, எனr - என்று சொல்வி, நெய்த்தலை - நெய்யுடன்; நேயம் நட்பு! இந்த அணிகலன்களைச் சுக்கிரீவன் இராமபிரானிடம் தர, அவற்றைக் கண்டு அவன், தன் தேவியின் அணிகலன்களே எனத் தேர்ந்து அடைந்த நிலையை அற்புதமாக வருணிப்பன் .

இந்த அணிகலன்களைப்பற்றிய அரிய தமிழ்ச் செய்தி யொன்று முற்காலத்தே வழக்கிவிருந்ததென்பது புறநானுாற் றால் அறியப்பெறுகின்றது. வறியரான புலவர் ஒருவர் தம் குடும்பத்துடன் சென்று வள்ளலான சோழன் ஒருவனைக் கண்டு அவனாற் பெரிதும் உபசரிக்கப் பெறுகின்றார். வள்ளல் புலவருக்கு அணிகலன் முதலிய பரிசுகளை நல்கு கின்றான். அந்த அணிகலன்களை முறை தெரியாமல் அவ் எளிய புலவரின் குடும்பத்தார் தம் உறுப்புகளில் மாறி அணிய, இது அரசவைகளில் இருந்தோரிடம் பெருநகையை விளைவிக் கின்றது. இதைப் புலவரே கூறுகின்றார்:

தென்பரதவர்............ .... ...

      • * * * **, * * * * * * * * * * * * * * * * * * * * *

எஞ்சா மரபில் வஞ்சிபாட, எமக்கென வகுத்த வல்ல; மிகப்பல மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை தாங்காது பொழிதந் தோனே: அதுகண்டு இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல் விரற்செறி மரபின செவித்தொடக் குநரும் செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும் அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும் மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும்

3. டிெ. டிெ, 4-17. காண்க.