பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 நினைவுக் குமிழிகள்-2

வினா : சுவாமி, அத்வைகம். துவைதம், விசிட்டாத் வைதம் இவற்றிற்குள்ள வேறுபாடு என்ன?

விடை : இந்த வினாவை விவேகாநந்தரே இராமகிருஷ்ண ரிடம் கேட்டார். அவர் தந்த விடையையே இப் போது தருகின்றேன். தத்துவ நிலையில் அறிந்து கொள்ள வேண்டுமானால் தத்துவ ஆராய்ச்சி வேண்டும்: சுருக்கமாகச் சீவான்மாவிற்கும் பரமான் மாவிற்குமுள்ள உறவுபற்றி இம்சின்றி தத்துவங்களி லும் கூறப்பெறுள்ளதை மட்டிலும் கூறுகின்றேன்.

ஒருவர் தொலைதுாரப் பயணத்தின்போது

கட்டமுது எடுத்துச் செல்லுகின்றார். இங்கு இரண்டு பொருள்கள் (Entities) உள்ளன. ஒன்று, எடுத்துச் செல்பவர் மற்ற்ொன்று. கட்டமுது ஆளைப் பரமான் வாகவும், கட்டமுதைச் சீவான்மா வாகவும் கொள்க. இரண்டும் தனித் தனியாக இருப்பது துவைதம் (துவைதம்-இரண்டு) சில கல் தொலைவு நடந்து செல்லும்போது அவருக்குப் பசி வருகின்றது. கட்டமுதிை உண்கின்றார். கட்டமுது அவர் வயிற்றை அடைகின்றது. இப்போதும் இரண்டும் தனித்தனியாகவே உள்ளன. நிலையில் தான் வேறுபாடு. இத விசிட்டாத்வைதம். இன்னும் சிறிது தூரம் நடந்து செல்லும்போது கட்டமுது செரிமானம் ஆகிவிடுகின்றது. சட்டமுதின் உருவம் இல்லை. அஃது ஆளின் உடலில் ஐக்கியமாகி விடுகின்றது. இது அத்வைதம். இங்கு சீவான்மா, பரமான்மா என்ற வேறுபாடே இல்லை.

திருப்பதி சென்ற பிறகு தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது அடிகளார் தந்த விளக்கம் என் ஆராய்ச்சிக்கு உந்து விசையாக-அடிப்படையாக இருந்து உதவி வருகின்றது. நான் அந்தர்யோகத்திற்குச் சென்றிருந்தபோது பள்ளியைச்