பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்பவானந்த அடிகள் 245

உடற்பயிற்சி செய்வதற்கேற்ப துண் ண் க ளி ல் லா ம ல் அஸ்பெஸ்டாஸ் சிமெண்டு தகடு வேயப்பெற்ற ஒரு பெரிய கொட்டகை போட்டார். மழை காலத்திலும் உடற்பயிற்சி, செய்வது கட்டாயமாக இருந்தது. உடற்பயிற்சி ஆசிரியர் இதைக் கவனித்து வந்தார்.

(5) ஒரு சமயம் அந்தர்யோகத்திற்கு ஆறு வயது சிறுவன் ஒருவன் வந்திருந்தான். இவன் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ராஜாவின் பேரன். வேடிக்கை யாகப் பேசுவான். ஆற்றில் நீராடும்போது அடிகளார் முதுகின் மீது கூட ஏறி விளையாடுவான்; சிறு பிள்ளைகட்குத் தம் இச்சையாக விளையாடும் உரிமை இருந்தது. நான் இப் பையனை, 'தம்பி, உன் தாத்தா ராஜா வேலையை விட்டு ஏன் மந்திரி வேலைக்கு வந்தார்?’ என்று கேட்டேன். உடனே அவன், 'ஐயா, ராஜாவுக்கு யோசனைகள் கூறுபவர் மந்திரிதானே. இதிலிருந்து மந்திரிதானே உயர்ந்தவர். இதனால்தான் என் தாத்தா மந்திரியானார்’ என்று பதிலிறுத்தான். பையனுக்கு ராஜா, மந்திரி, அரசு முறைபற்றித் தெரியாமலிருப்பினும் அவனுடைய சாதுர்ய மான பதில் என்னை வியக்க வைத்தது.

1966-ஏப்ரல் மாதம் என் இளைய மகனைப் பள்ளியில் சேர்க்கும் விஷயமாக அடிகளாரைப் பார்க்கச் சென்றிருந்த பொழுது அப்பொழுது தபோவனத்தில் பணியாற்றிய 12 பேருக்கும் கல்லாடை தரப்பெற்றுத் துறவிகள் கோலத்தில் இருந்தனர். அப்போது ராமுடு என்பவர் சாந்தாருந்தா' என்ற பெயரில் விளங்கினார். அப்பொழுதும் அலுவலக மேலாளர் பொறுப்பும் அவரிடம்தான் இருந்தது. நான் திருப்பதியிலிருந்தபோதும் (1976), சென்னைக்கு வந்த பிறகும் (1980 என்பதாக நினைவு) இவரைத் தலைமைச் செயலகத்தில் சந்திக்கும் பேறு ஏற்பட்டது. இருவரும்