பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று மாநாடுகள் 217

போனார்கள். சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் திரு. கோ. சுப்பிரமணிய பிள்ளை இவர்கட்கு எழுதினேன். அவர்கள் கேட்பயணப்படி, பேச்சுப்படி இவற்றைத் தருவதற்கு எங்கட்கு நிதிவசதி இல்லாததால் இம்முயற்சியைக் கைவிட வேண்டிய தாயிற்று. பல்லாவரம் மறைமலை அடிகளாருக்கும் எழுதி அவர்கள் கேட்ட தொகை எங்கள் நிதிவசதிக்கு அப்பாற் பட்டிருந்ததால் இம்முயற்சி என் சிந்தனையிலிருந்தே அகன்றது. கலைமகளாகிய மருமகள் வருவதற்கு மாமியா ராகிய திருமகள் நிரந்தரத் தடையாகவே இருந்துவிட்டாள்.

திருக்குறள் மாநாடு : அக்காலத்தில் திருச்சி மாவட்டக் கோவாப்பரேட்டிவ் வங்கிச் செயலாளர் ஜி. வரதராஜப் பிள்ளை திருக்குறளில் மிக்க ஈடுபாடு கொண்டு திருக்குறள் கருத்துகளைப் பரப்பி வந்தார். இவர் இலால்குடியைச் சேர்ந்தவர். வள்ளல் பரமசிவம் பிள்ளை யவர்களின் அண்ணனின் திருமகனார். திருக்குறள் பணியில் ஒல்லும் வகையெல்லாம் பிள்ளைக்கு உதவிசெய்தவர் இலால்குடிக் கழக உயர் நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து வந்த திரு. கடேச முதலியார். பிள்ளையவர்கள் திருக்குறள் பற்றி வெளியிட்ட ஓரிரு நூலுக்கும் சிரமதானம் வழங்கிய வர். திருச்சி மாவட்டத்தில் முக்கியமான சில ஊர்களில் திருக்குறள் மாநாடுகள் நடத்திப் பெரும்பணி புரிந்து வந்தார் திரு. வரதராஜப் பிள்ளை. இத்தகைய மாநாடு ஒன்று துறையூரிலும் நடைபெற்றது. இதனை அமைத்து நடத்தும் பொறுப்பு என்னிடம் வந்தது. பெரிய கூட்டங்கள் நடை பெறுவதற்குத் துறையூரில் பெரிய மண்டபங்கள் இல்லை ஊருக்குள்தான் மாநாடு நடைபெற்றாக வேண்டும். துறையூர் ஜமீந்தார் அரண்மனையின் கீழ்ப்புரம் அகலமான இடம் இருந்தது. நடுவில் பேருந்துகள் செல்லும் சாலை அமைந்திருந்தது. மாநாட்டை மாலை 5 மணிக்கு வைத்துக்