பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவட்டக் கல்வியதிகாரிகள் 22?

முதலியார், திரு. கே. எல். பழ நிசாமிப் பிள்ளை என்பவர்கள் இந்த இருவர்களைப்பற்றி முன் குமிழிகளில் குறிப்பிட் டுள்ளேன்.

இந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் எங்கள் பள்ளி ஆண்டுத் தணிக்கையையொட்டி துறையூரில் ஒருவாரம் அல்லது 10 நாட்கள் முகாம் இட்டுத் தங்குவார்கள். முசிறி வட்டத்திலுள்ள எல்லாத் தொடக்க நிலைப் பள்ளிகன் பற்றிய ஆய்வுகளும் இச்சமயத்தில் மேற்கொள்ளப் பெறும். மாவட்டக் கல்வி அதிகாரிகளும் பள்ளித் துணை ஆய்வாளர் களும் அரசுப் பயண விடுதியில் தங்கிக் கொள்வார்கள். பள்ளித் துணை ஆய்வாளர்கட்கும் அவர்களுடன் வந்திருக்கும் சிப்பந்திகட்கும் மாவட்டக் கல்வி அதிகாரி கட்கும் அவருடன் வந்திருக்கும் சிப்பந்திகட்கும் எங்கள் பள்ளி நிர்வாகம் தான் விருந்தோம்பும் (உண்மை உரைத் தால் ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் தொகையிலிருந்து இச் செலவு மேற்கொள்ளப் பெறும்). இதனால் இந்த அதிகாரிகள் ஆசிரியர்களாகிய எங்கள் விருந்தினர்களாக இருந்தார்கள் என்று கொள்வதே சிறப்பாகும்.

எல்லோருமே எங்கள் பள்ளியின்மீது அன்பாகத்தான் இருந்தார்கள். பள்ளித் தணிக்கை அன்புச் சூழலில்தான் நடைபெற்றது. எல்லாப் பிரச்சினைகளையும் பரிவுடன் தான் அணுகி உதவினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அக்காலத்தில் (நாடு அடிமையாக இருந்தபோது) அரசு அதிகாரிகள் நடந்து கொள்ளும் போக்கிற்கும் இப்போது அதிகாரிகள் நடந்து கொள்ளும் போக்கிற்கும் மலையனைய வேறுபாடுகளைக் காண முடியும். அக்காலத்தில் அதிகாரிகள் மிக நேர்மையாக நடந்து கொண்டனர் என்பது என் கணிப்பு. இப்போது ஒவ்வொரு நிலையிலும் அரசு குறுக்கிடுவதால் தலைமையாசிரியர்களைக் கண்டு அஞ்சும்