பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 நினைவுக் குமிழிகள்-2

அது நகரத்திலுள்ள பள்ளி. கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் தமக்கை மகனோ மைத்துனர் மகனோ ஐந்தாம் படிவத்தில் நின்று விட்டான், கலைவாணர், பள்ளி யின் தாளாளரையும் மாவட்டக் கல்வியதிகாரியையும் சந்தித்துத் தம் பையன் எப்படியாவது மேல்வகுப்பிற்கு மாற்றப்பட வேண்டும் என்று வேண்டினார். காளாளர் ரூ. 5000/- பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினால் இது செய்யப்படும் என்றார். மாவட்டக் கல்வியதிகாரி நன் கொடை வழங்காமலிருந்தால் தாம் க வ னி ப் ப த ா க ச் சொன்னார். ஆனால் ஏதோ ஒரு வகுப்பில் தவறு நேர்ந்து விட்டதாகவும், அதைச் சரிப்படுத்தி ஒரு மாணவனை மேல் வகுப்பிற்கு மாற்றவேண்டும் என்ற விண்ணப்பம் பள்ளியி லிருந்து தமக்கு வரவேண்டும் என்றார். அங்ங்ணமே விண்ணப் பமும் அனுப்பப்பெற்று மாவட்ட அதிகாரி அப்பையன் எழுதிய விடைத் தாள்களையும் ஒவ்வொரு விடைத்தாளில் பெற்ற மதிப்பெண்களையும் விடைத்தாள்களுடன் வினாத் தாள்களையும் அனுப்புமாறு கேட்டு எழுதினார். தலைமை யாசிரியர் விடைத்தாள்களைப் பார்க்கத் திடுக்கிட்டுப் போனார். சரியான மதிப்பெண்கள் அப்பையன் பெற வில்லை. பையனை அழைத்து வேறு விடைத்தாள்களில் வேண்டியஅளவுபதிப்பெண்கள் பெறுவதற்கேற்ற விடைகளை எழுதச் செய்து மதிப்பெண்கள் வழங்கி மாவட்டக் கல்வி யதிகாரிக்கு அனுப்பப் பெற்றன. மாவட்டக் கல்வியதிகாரி பும் அப்பையனின் பெயர் பட்டியலில் வெற்றிபெற்ற பெயர் களுடன் சேர்க்க அனுமதித்தார். பையன் மேல்வகுப்பிற்கு மாற்றப்பெற்றான். கலைவாணரோ பள்ளிக்கு நன்கொடை வழங்கவில்லை. நடிக மன்னர் அல்லவா? இதில் நன்றாக நாடகம் ஆடினார். இளமைத் துடுக்குடனும் நேர்மை யாகவும் பணியாற்றும் எனக்கு "என்ன உலகமடா!' என்பது தெரிந்தது. ஒவ்வொரு பள்ளியிலும் என்னென்ன நடந் திருக்கக் கூடுமோ என்று என் நேர்மை மனம் விழித்துக்