பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்ப்புப் பிள்ளையின் சோகக் கதை 235

உதவும் பிச்சுமணி அய்யர்பற்றியே அதிகமாகக் கோள்கள் வரும். நான் அவரை விசாரிப்பதுபோல் நடித்துப் பொருட் படுத்துவது இல்லை. இவரிடம் எல்லாவிதத் திறமைகளும் இருந்தமையால் எல்லோரும் பொறாமைப் படுகின்றனர் என்ற உண்மை எனக்குத் தெரிந்து விட்டது. இதனால் எல்லாவற்றையும் காதில் வாங்கிக் கொண்டு யாருடனும் காழ்ப்புக் கொள்ளாமல் என்னை இயக்கிக் கொண்டிருந் தான் என் இதயகமலத்தில் விற்றிருக்கும் இறைவன். இந்த இறைவனே என்னைப் பலவித இடுக்கண்ககளில் சிக்க வைத்தும் வேடிக்கை பார்ப்பான். இதற்கேற்ற சகிப்புத் தன்மையையும் என் இயல்பாக இருக்கும்படியும் செய்த "ாதலால் இருவினை யொப்பு என்ற சித்தாந்த உண்மையை எனக்கு இளம் வயதிலேயே தெளிவாகப் புலப் படவும் செய்திருந்தான்.

குமிழி-94 30. வளர்ப்புப் பிள்ளையின்

சோகக் கதை

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா

பேசும்பொற் சித்திரமே! அள்ளி யணைத்திடவே - என்முன்னே

ஆடி வருந்தேனே!

ஒடி வருகையிலே - கண்ணம்மா!

உள்ளங் குளரு தடீ! ஆடித் திரிதல்கண்டால் - உன்னைப்போய்

ஆவி தழுவு தடீ!

சொல்லு மழலையில்ே - கண்ணம்மா!

துன்பங்கள் தீர்த்திடுவாய்;.