பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 நினைவுக் குமிழிகள்-2

சினிமாத் தொழிலின் நெளிவு சுழிவுகளையெல்லாம் ஆய்ந்த கிருட்டிணசாமி ரெட்டியார் அத்தொழிலில் தமது இயல்புக்கு ஒத்துவராது என்று கருதி அதில் இறங்காதது தெய்வத்தின் கட்டளை என்றே கருதவேண்டும். இந்த இடத்தில் கண்ணன் கீதையில் குறிப்பிடும் சுதர்மம்' பற்றி நினைவில் எழுகின்றது. கிருட்டினசாமி ரெட்டியாருக்கு இயல்பாக அமைந்தது பேருந்துத் தொழில். சிறு வயதிலேயே ஒரு நிலக்கிழாருக்கு மகிழ்வுந்து ஒட்டியாகப்பணியாற்றினார். பின்னர் ஒரு பேருந்து கம்பெனியில் மேலாளராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பின்னர் ஒரு பேருந்தின் அதிபதியானார். ஆகவே தொடக்கத்திலிருந்தே மோட் டார்த் தொழில் கிருட்டினசாமி ரெட்டியாருக்குச் சுதர்ம மாக அமைந்துவிட்டது. அப்படியிருக்க துணிக்கடை முதலாளி புதிய தொழில் ஒன்றைத் தொடங்குவதற்கு வகை செய்ய, தம்புக்கு மோட்டார்த் தொழில் சிறப்பற்றதாக (விகுணமாக)த் தோன்றலாயிற்று. இத்தோற்றம் நிலை யற்றதே. இவர் உள்ளத்தில் வீற்றிருந்த கண்ணன் இவரைத் தடுத்து நிறுத்தினான். சினிமாத் தொழில் பற்றிய இவர் ஆய்வு இவரிடம் ஒருவித தெளிவினைத் தந்தது. நமக்கு உகந்த தொழில் மோட்டார்த் தொழிலே’ என்ற முடிவுக்கும் வரச் செய்தது. அதற்கு ஏற்ற தருணமும் இயல்பாகவே வந்து சேர்ந்தது.

இதுகாறும் தம்புவைப் பற்றிக் கூறியவையாவும் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்றவை. நாடு விடுதலை பெற்றபிறகு தம்புவின் வாழ்க்கையிலும் தொழிவிலும் புதிய திருப்பம் ஏற்பட்டது. எல்லா நிலை களிலும் சாதகமான சூழ்நிலைகளே உருவாயின. கும்பகோணத்தில் ஒரு பேருந்துக் கம்பெனியார் பதின்மூன்று பேருந்துகளை விற்றார். அவற்றை வாங்கினார் தம்பு. வண்டிகளைப் பழுதுபார்த்து நல் நிலைக்குக் கொணர்ந்தார்.