பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

272 - நினைவுக் குமிழிகள்-2

பழமாக வில்லை. அதுவும் நன்மையின் பொருட்டே என்று அமைதிகொண்டு விட்டேன். நான் நினைத்தவாறு அத் திருமணம் நடைபெற்றாலும் என் மனத்திற்குகந்தாக இராது என்று இப்போது உணர்கின்றேன்.

Χ X X

ஆறு ஏழு ஆண்டுகட்கு முன்னர் தம்பு திருநாடு அலங் கரித்த செய்தியை நாளிதழ்களில்கண்டேன்; துக்கப்பட்டேன். தெளித்த மனம்; நேர்மையான உள்ளம். நோய்நொடி இல்லாத உடல், அப்படியிருந்தும் இவர் பிரிவு மின்னாது இடித்தது போலிருந்தது. அவர் திருமகன் சின்னபாப்பு தந்தையின் பிரிவை எனக்குத் தெரிவிக்கவில்லை. நல்ல பையன்தான்; நான் அவரிடம் நெருங்கிப் பழகியதை அவன் சரியாக உணரவில்லை போலும் என நினைத்துக் கொண் டேன். எனினும், என் மனம் கேட்கவில்லை. ஒரு வார்த்தில் ஒர் ஆறுதல் கடிதம் எழுதினேன். சுமார் பத்தொன்பது ஆண்டுகள் மக்கட்பேறு இல்லாதவனாக இருந்தான். கடிதத் தில், "பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறந்தலும் உலக இயற்கை என்றாலும் எல்லோராலும் பந்தபாசம் ஆற்றிருக்க முடியாது. உன் துக்கத்தை நான் அறிவேன்; அதனை நானும் பகிர்ந்து கொள்ளுகின்றேன். பிரிந்தவர் ஆன்மா பரமபதத் தில் அமைதியாக இருக்கும். எனினும், அவரது ஒரு கூறு நினக்கு மகனாகப் பிறந்து நின்னை வாழ்விக்கும். மனங்கலங் காது அமைதியுடன் இருப்பாயாக’ என்று எழுதியதாக நினைவு. இதற்கும் மறுமொழி இல்லை. ஒருகால் செல்வச் செருக்காக இருக்குமோ? இது இறைவனுக்குத்தான் வெளிச்சம். நான் எழுதிய மறு ஆண்டே சின்னபாப்புவுக்கு மகன் பிறந்தான்; மகிழ்ந்தேன். -

இச்செய்தி அறிந்த இரண்டு திங்களில் என் சம்பந்தியார் சம்பந்தி வீட்டில் ஒரு பெரும் பிரிவு நேர்ந்தது. கேதம்விசாரிப் பதற்காகத் திருச்சி சென்றிருந்தேன். சின்னபாப்புவை துக்க