பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.74 நினைவுக் குழிழிகள்.2

கணித்துச் சொல்ல முடியாது. ஒய்வு பெற்ற சில ஆசிரியர் களை நியமித்துக் கொள்ள வேண்டியிருந்தது. வறுமையால் தானே இவர்கள் வேலை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது என்று எண்ணி மனம் புழுங்குவேன். இவர்கள் தாம் உண்டு தம் வேலை உண்டு என்று தம் பணியை அற்புதமாக ஆற்றி வந்தனர். இப்படி நியமிக்கப் பெற்றவர்கள் இருவர். ஒருவர் அனந்தாச்சாரி என்பவர்; ஆங்கிலம் கற்பிப்பதில் திறமை மிக்கவர். இன்னொருவர் கிருட்டிணசாமி அய்யங்கார் என்பவர்; தலைமையாசிரியராக இருந்து ஒய்வு பெற்றவர். இவர் கணக்கை அற்புதமாகக் கற்பிப்பவர். இவர்களால் எனக்கு எந்த விதத் தொல்லைகளும் இல்லை. நான் இவர்களைத் தந்தைபோல் பாவித்து மரியாதையாக நடந்து கொள்வேன். நான் பள்ளிமேல் கொண்டிருந்த அக்கறையைக் கண்டு இவர்கள் வியந்து போயினர். அதன் பிறகு ஒய்வு பெற்றவர்கள் கிடைப்பதில்லை. நாங்கள் தரும் சம்பளம் அவர்கட்குப் போதாது தனிக் குடும்பமும் வைக்க முடியாது. அவர்கள் நிலையில் உணவு விடுதி உணவும் பெரும்பாலும் ஒத்துக் கொள்வதில்லை. இக்காரணத்தால் இவர்கள் சிற்றுார்ப் பக்கங்கட்கு வருவதற்கு விரும்புவதில்லை. திருச்சி போன்ற நகர்ப்புறப் பள்ளிகளையே விரும்பினர். அங்குக் கிடைக்காவிடில் வீட்டில் ஒய்வாக இருப்பதே மேல் என்று இருந்துவிடுவர்,

x - X X

பெரும்பாலும் அறிவியல், கணிதம் இப்பாடங்கட்குத் தான் ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. நான் அறிவியல், கணிதம் ஆகிய இரண்டையும் கற்றவனாதலால் மேற்வகுப்பு மாணவர்கட்குக் கற்பிக்கும் பெரும்பளுவை நான் சிரமத் துடன் தாங்கிக் கொள்வேன். எவ்வளவுதான் தாங்க முடியும்? 4, 5, 6 படிவங்களில் இரண்டு, மூன்று பிரிவுகள் ஏற்பட்டதால் பளுவைச் சமாளிக்க முடியவில்லை. தலைமை