பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 நினைவுக் குமிழிகள்-2

தலைமையாசிரியர் கையில்’ என்று சொல்லித் தப்பித்துக் கொண்டிருக்கலாம். பொதுமக்கள், ஊர்ப் பெரியவர்கள், இவர்களில் ஒருவரும் இதுபற்றி என்னை நெருங்குவதில்லை. பதினைந்தும் (கீழ் வகுப்பு). இருபத்தைந்தும் (மேல் வகுப்பு) கணக்கில் சுழியும் வாங்கியுள்ளவர்களைக் கூட விதிகளின் அமைத்துக் கொண்டு மாற்றம் செய்வேன். இப்படிச் செய்யும்போது ஏழை மாணவர்களின் வீட்டுச் சூழ்நிலை, நெடுநேரம் படிப்பதற்கு மண்ணெய் கூட வாங்க முடியாத வறுமை இவை எல்லாம் மனத்தில் எழும். மனம் இரங்கிக் குறைத்த மதிப்பெண்கட்கு வகுப்பு மாற்றம் செய்யப்பெறும்.

ஆனால் இப்பொழுது நடைபெறும் தேர்வு முறைகள், மதிப்பீட்டில் நடைபெறும் தில்லு முல்லுகள், அலுவல கத்தில் பணி புரிபவர்கள் செய்யும் முறைகேடுகள் இவை யெல்லாம் என் மனத்தில் குமிழியிடுகின்றன. இவற்றிற் கெல்லாம் முத்தாய்ப்பாக கேரளப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அட்டூழியங்கள் அம்பலமானதால் ஆசிரியப் பணிக்குச் சொல்ல முடியாத இழுக்கு ஏற்பட்டு விட்டது. நான் படித்த காலத்தில் மதிபபெண் வருவது இறைவன் செயல் என்று பக்தியுடன் கருதப்பெற்றது (1930-40). இப்பொழுது பணம், அரசியல்வாதிகளின் பரிந்துரைகள் இவற்றால் எதுவும் நடைபெறும் என்றாகி விட்டது. என் பேரப் பிள்ளைகள் படித்து வெளிவருங்கால் என்னென்ன முறைகேடுகள் நடக்கப் போகின்றனவோ? ஏ ஆண்டவா, நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்.' -

Χ X X

நான் துறையூரில் இருந்தபொழுது எதிர்பாராத விதமாக இரண்டு பெரியார்களின் தொடர்பு ஏற்பட்டது. அக்காலத்தில் உலகம் சுற்றும் தமிழன்’ என்பவர் (ஏ. கே. செட்டியார்-விரித்துக் கூறினால் ஏ. கருப்பன் செட்டியார்)