பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சிதறல்கள் 287

ஒரு நாள் துறையூருக்கு வந்தார் உலகம் சுற்றும் தமிழன்' என்ற நூலைப் படித்து பெருமதிப்பு கொண்டிருந்தேன். ஆனால் அவர் ஏ. கே. செட்டியார் என்பது தெரியாது. இப்போது முதன் முதலாகப் பார்த்தபோதுகூட அவர்தான் இவர் என்பதும் அறிந்துகொள்ள முடியவில்லை, அவர் சொன்ன பிறகுதான் உலகம் சுற்றும் தமிழன் இவர்தான். என்பது தெரிந்தது. நான் கற்பனையில் கொண்டிருந்த உலகம் சுற்றும் தமிழனுக்கும் நேரில் பார்த்த ஏ. கே. செட்டியாருக்கும் மலைக்கும் மண்ணாங்கட்டிக்கும் உள்ள வேறுபாட்டைக் கண்டேன். அவ்வளவு எளிமையாக இருந் தார். குளிர்பானம் வழங்கினேன். இக்காலத்தில் (அக் காலத்தில் கூடத்தான்) இதுதானே திடீர் விருந்து!

ஆசிரியர் அறைக்கு இப்பெருமகனாரை இட்டுச் சென்று அங்கிருந்தவர்கட்கு அறிமுகம் செய்து வைத்தேன். எல்லோரும் இவரைப் பார்க்க மகிழ்ந்தனர். அரைமணி நேரத்தில் ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன். ஊருக்குள் சிலருக்குதான் மிதிவண்டிப் பையன் மூலம் தெரிவித்தேன். அனைவருமே வந்து சேர்ந்தனர். என் பயண அனுபவங்கள் என்ற தலைப்பில் பேசினதாக நினைவு. திரு. செட்டியார் இக்கால அரசியல் மேடைப் பேச்சாளர்கள் போல் வெற்று வேட்டுகள் வெடிப்பவர் அல்லர். கருத்து களை நகைச் சுவையாக எடுத்துக் கூறுவதில் இவருக்கு நிகர் இவரே. அருமையாகப் பேசி கேட்போர் உள்ளத்தில் நிலை யான இடத்தைப் பெற்றார். அக்காலத்தி குமரி மலர்' என்ற மாத இலக்கிய இதழ் நடத்தி வந்தார். ஆண்டுச் சந்தா ரூ. 61- தான். உடனே மூன்று வருடச் சந்தாவுக்கு ரூ. 18:- தந்தேன். தவறாமல் இதழ்கள் வந்து கொண் டிருந்தன.