பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சிதறல்கள் 289

செய்தியை மூவேந்தர் அச்சகத்தில் (சீநிவாசப் பெருமான் கோயில் சந்நிதித் தெரு, இராயப்பேட்டை, சென்னை-14) அறிந்து வருந்தினேன்.

X X X X

துறையூரில் பணியாற்றிய போது இன்னொரு பெரியார் டாக்டர் சக்திரசேகர் என்பவர் துறையூர் பக்கம் வந்தார். பள்ளிக்கும் வருகை தந்தார். அப்போது அவர் எங்கும் பணியில் அமரவில்லை. அவசரமாகக் குளிர்பானம் வழங்கி, மேல்வகுப்பு மாணவர்கட்கும் ஆசிரியர்க்கு மட்டிலும்கூட்டம் ஏற்பாடு செய்தேன். ஆங்கிலத்தில்தான் பேசினார். மக்கள் தொகை ஆய்வுத் துறையில் வல்லவர். எங்கள் பள்ளி நிலைக்கு இறங்கிப் பேசினார். எனினும் பேச்சு எடுபட வில்லை. காரணம் அதைச் செரிமானம் செய்வதற்கேற்று கேட்போரின் அறிவு நிலை இல்லை. அன்றிரவு என் இல்லத்தில் ஒரு சிறிய விருந்து. மறுநாள் காலையில் திருச்சிக்குப் பேருந்தில் அனுப்பி வைத்தேன். இவரைப் பின்னர் காரைக்குடியில் ஒரு முறையும், திருப்பதியில் மூன்று முறையும் சந்தித்துப் பழகினேன்’

X X X X

நான் துறையூரில் பணியாற்றிய போது ஒரு மாணவனை பற்றிய நினைவு இன்னும் என் மனத்தில் பசுமையாக உள்ளது. நாமக்கல் அருகிலுள்ள சிவநாய்க்கன் பட்டியி விருந்து ஓர் அன்பர் தம் மகன் முத்து என்பவனை துறையூரில் என் பள்ளியில் இரண்டாவது படிவத்தில் சேர்த்து என்

1. இவர் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பேராசிரியராகவும், அடுத்து மத்திய அரசின் அமைச்சராகவும், அதற்கடுத்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் பணியாற்றியவர்.

நி-19