பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம்-மதுரை - 307

அழகர் கோயில் பற்றிச் சில சிந்தனைகள் மனத்தில் எழுகின்றன. முருகனது ஆறாவது படைவீடு பழமுதிர் சோலை. மதுரைக்கு வடக்கே பன்னிரண்டு கல்தொலைவி லிருக்கும் அழகர் கோயிலே இஃது என்று சிலர் பொதுவாகக் கருதுவதை ஆய்வாளர்கள் மறுக்கின்றனர். சிலப்பதிகாரத் தில் (சிலப். காதை- 1. அடி.91) திருமால் குன்றம்’ எனக் குறிப்பிடப் பெற்றிருப்பது இன்றைய அழகர் மலையே என்று அவர்கள் நம்புகின்றனர். முருகன் திருக்கோயில் உண்மையில் இங்கு இருந்திருக்குமாயின் இளங்கோ அடிகள் அதனைக் கட்டாயம் குறிப்பிட்டிருப்பர் என்பது அவர்களது எண்ணம். அங்ஙனமே, அகநானூற்றுப் புலவர்களாகிய மதுரை மருதன் இளகாகனாரும் எருக்காட்டுர்த் தாயங் கண்ணனாரும் இதனைக் குறிப்பிடாது விட்டிருப்பர் என்று சொல்லுவதற் கில்லை. கவித்தொகையில்,

ஈரணிக் கேற்ற ஒடியாப் படிவத்துச் சூர்கொன்ற செவ்வேலாற் பாடிப் பலநாளும் ஆராக் கணைகாமங் குன்றத்து நின்னொடு மாரி யிறுத்த கடவுளைக் கண்டாயோ?"

(ஈரணி - ஈர ஆடை ஒடிய - கெடாத: படிவம்-விரதம், ஆராக் கணை காமம் - நுகர்ந்து அமையாத மிக்க காமம்; .

என்ற பகுதி திருப்பரங்குன்றத்தைக் குறிப்பதாகவே பொருள் உரைப்பர். கச்சினார்க்கினியர் அங்ங்னமே இன்னொரு பாடலில் (கலி 27) வரும் வென்வேலான் குன்று என்பதற்கு முருகன் திருப்பரங்குன்றம்’ என்றே பொருள் கூறப் பெற்றுள்ளது. இந்த இரண்டு பாடற் பகுதி களிலும் திருப்பரங்குன்றத்தை வெளிப்படையாகக் குறிக்கும்

3. கலி - 93.