பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 நினைவுக் குமிழிகள்-2

புறச் சூழ்நிலையும் மனநிலையும் ஒரு சேரப் பெற்ற நிலையில் ஆழ்வார் பாசுரங்கள் படலம் படலமாக என் சிந்தனையில் எழுகின்றன. ஆழ்வார்கள் காலத்தில் இருந்த சூழ்நிலையே இன்றும் நின்று நிலவுவதைக் கண்டு என் உள்ளம் அதிசயித்து மகிழ்கின்றது. இந்தச் சோலைக்கு வடக்கிலும் மேற்கிலும் நீண்டுயர்ந்த மலைச் சிகரங்கள் இருப்பதையும் சோலையும் மரங்கள் அடர்ந்து இருப்பதையும் கண்டு இறும்பூது அடைகின்றது. இப்புறக் காட்சி உடனே என்னை,

குலமலை கோலமலை

குளிர்மாமலை கொற்றமலை நீலமலை நீண்டமலை

திருமாவிருஞ் சோலையதே" (குலம்-தொண்டக்குலம்: கோலம் - அழகு; மா . பெரிய: கொற்றம் - வெற்றி, நிலம் - மரம் முளைப்பதற்குப் பாங்கான இடம்)

என்ற பெரியாழ்வாரின் பாசுரப் பகுதியில் ஆழங்கால் படச் செய்கின்றது. இந்தச் சோலையின் நடுவில் தான் திருக்கோயில் திகழ்கின்றது. ஆகவே, இது திருமாலிருஞ் சோலை' என்று பாாாட்டப்பெறும் பொருத்தத்தைக் கண்டு வியப்பெய்தச் செய்கின்றது.

இத்தலத்தைப் பற்றிய ஆழ்வார் பாசுரங்களின் சில தொடர்கள் நம் மனத்தில் குமிழியிடத் தொடங்குகின்றன. பறியொடு பிணைசேர் மாலிருஞ்சோலை: என்ாது திருவாய் மொழித் (2-10:6) தொடர். திருமலைக்கு "மறியொடு பிணை சேர்’ என்ற அடைமொழி கொடுத்தற்கு ஓர் உட்கருத்து உண்டு. இந்த மலையில் குட்டியும் தாயும்

7. பெரியாழ், திரு. 4.3:5