பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 நினைவுக் குமிழிகள்.)

களையும் கடந்து கருவறையை அடைந்து கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் பெரிய பிராட்டியார் பூமிப்பிராட்டியார் இருபுறமும் நிற்கச் சேவை சாதிக்கும் மூலவர் பரமசாமியைக் காண்கின்றோம். இவரே திருமாலிருஞ் சோலைமலை எம்பெருமான். இவருடைய திருமேனியழகு அலையெறிந்து நம்மீது பாய்கின்றது. நம்மையும் அறியாது,

முடிச்சோதி யாய் உனது

முகச்சோதி மலர்ந்ததுவோ? அடிச்சோதி நீநின்ற

தாமரையாய் அலர்ந்ததுவோ? படிச்சோதி ஆடையொடும்

பல்கலனாய் நின்பைம்பொன் கடிச்சோதி கலந்ததுவோ

திருமாலே கட்டுரையே." (கடி-இடுப்பு (வடசொல்):

என்ற நம்மாழ்வாரின் பாசுரம் மிடற்றொலியாக வெளிப் படுகின்றது. உற்சவமூர்த்தியே அழகர் என்னும் சுந்தரராசர், இத்திருத்தலத்தின் தாயார் கல்யாணசுந்தரவல்லி நாச்சியார். இவருடைய சந்நிதி கோயிலின் தென்புறம் உள்ளது. இவரைத் தணிக் கோயில்தாயார் என்றும் வழங்குகின்றனர்.

2. ஒரு சமயம் திருப்பதியில் M, அனந்த சயனம் அய்யங்காருடன் திருமாலிருஞ்சோலையைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தபோது இப்பெருமான் "இருந்த திருக்கோலத்தில் இருப்பதாகக் கூறினேன். அவர் இல்லை, ரெட்டியார், நின்ற திருக்கோலம் என்று என்னைத் திருத்தினார். அய்யங்கார் அவர் களின் நினைவாற்றலைக் கண்டு வியந்துபோனேன்,

9. திருவாய் 3.1:1