பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம்-நெல்லை 325

ஒன்றரை-இரண்டு அடி விட்டமுள்ள வட்டமான கிணறு இது. இதில் ஒரு நாழியால் (அளவுள்ள ஒரு பாத்திரம்) நீரை மொண்டால், மீண்டும் நீர் அதே மட்டத்திலிருக்கும். இப்படி மொண்டு நீராட வேண்டும். நீராடின நீர் வெளியில் செல்லுவதற்கும் வசதி செய்யப் பெற்றிருந்தது. இதில் நீராடிய பிறகு ஆடைகளைப் பிழிந்து கடற்கரை மணலில் உலர்த்தி விட்டு மாற்று ஆடைகளைப் புனைந்து கொண்டு திருக்கோயில் .ெ ச ன் று ஆறுமுகப் பெருமானைச் சேவித்தோம். பகழிக்கூத்தர் அருளிய இரண்டு பாடல்களை மிடற்றொலியில் பாடிச் சேவித்தோம்.

கத்தும் தரங்கம் எடுத்தெறியக்

கடுஞ்சூல் உளைந்து வலம்புரிகள் கரையில் தவழ்ந்து வாலுகத்தில்

கான்ற மணிக்கு விலையுண்டு: தத்துங் கரட விகடதட

தந்திப் பிறைக்கூன் மருப்பில்விளை தாளம் தனக்கு விலையுண்டு:

தழைத்துக் கழுத்து விளைந்த மணிக் கொத்தும் சுமந்த பசுஞ்சாலிக்

குளிர்முத் தினுக்கு விலையுண்டு; கொண்டல் தருநித் திலத்தனக்குக்

கூறுந் தரமுண்டு; உன்கணிவாய் முத்தம் தனக்கு விலையில்லை;

முருகா முத்தம் தருகவே: முத்தம் சொரியும் கடலலைவாய் முதல்வா முத்தம் தருகவே."

6. திருச்செந்தூர்ச் சுப்பிரமணியர் பிள்ளைத் தமிழ்

முத்தப்பருவம்,