பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம்-கன்னியாகுமரி 331

சிறையில் தேவகியருகிலும் மாற்றிவிடுகின்றார். கம்சன் இந்தப் பெண் குழவியை எடுத்துச் சென்று அதனைக் கொல்ல விரைகின்றான். ஆனால் அக்குழந்தையோ அவனை இகழ்ந்து உதைத்துத் தள்ளிவிட்டு ஆகாயத்தில் மறை கின்றது. இங்கனம் மறைந்த குழந்தையே திருமாலின் தங்கையான எல்லாம் வல்ல சக்தி, இந்தச் சக்தியே பகவதி என்ற திருநாமத்தோடு இக்கடற்கரையில் கையில் இலுப்பைப் பூமாலை தாங்கிச் சிவபெருமானை நோக்கித் தவம் செய்கின்றாள். இவளே என்றும் கன்னியாக' குமரியாக, நின்று தவம் செய்கின்றாள். -

மூன்றாவது கதை. பகன், மூகன் என்ற இரண்டு அசுரர்கள் தேவர்கட்கு இடுக்கண் விளைவிக்கின்றனர்" தேவர்கள் இறைவனிடம் முறையிட, அவன் தன்னுடைய சக்தியை இருகூறாக்கி இரண்டு பெண் தெய்வங்களாக உருவாக்குகின்றான். இந்தச் சக்தியில் ஒன்று வடகோடியில் கங்கைக் கரையில் காளி தேவியாகவும், மற்றொன்று தென் கோடியில் கடற்கரையில் குமரியாகவும் நின்று நம்மைக் காக்கின்றனர். பகவனுடனும் மூகனுடனும் போர் புரிந்து வென்று தேவர்களின் இடுக்கண் தீர்க்கின்றனர்.

திருக்கோயில் இக்கதைகளை அறிந்தவண்ணம் திருக் கோயிலில் நுழைகின்றோம். கோயில் பெரியதும் அல்ல; சிறியதும் அல்ல; நடுத்தரமானது. திருக்கோயிலின் தலை வாயில் வடபுறமாக அமைந்துள்ளது. இரண்டு சுற்றுகள் உள்ள கோயில். பெரிய சுற்றில் கொடி மரம், பலிபீடம் முதலியன உள்ளன. நாடோறும் அம்மை இதனைச் சுற்றி வருவாள். இதற்கு அடுத்த உள் சுற்றில் மணிமண்டபமும் சபா மண்டபமும் உள்ளன. மணிமண்டபத்தை ஆறு வட்டத் துTண்கள் தாங்கி நிற்கின்றன. இதற்கும் உள்ளே உள்ள உள் மண்டபத்தில்தான் கன்னிக்குமரி தவக்