பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தலப் பயணம்-கன்னியாகுமரி 333

வைப்பதாகச் சொல்லுகின்றார். நாரதர் தாணுமாலயனுக்கு விதித்த நிபந்தனைகள் இரண்டு: (1) கண்களில்லாத் தேங்காய், காம்பில்லா மாங்காய், நரம்பில்லா வெற்றிலை’ கணு இல்லாக் கரும்பு, இதழ்கள் இல்லா மலர்-இவற்றைச் சீதனப் பொருளாகக் கொண்டுவர வேண்டும்; (2) திருமணம் நடைபெற வேண்டிய நல்லோரை பகலவன் உதயத்தில்; அதற்கு ஒரு நாழிகைக்கு முன்னதாகவே மணமகன் மன வறைக்கு வந்துவிடவேண்டும்.

மணமகனான தானுமாலயன் இதற்கெல்லாம் சலிக் காமல் கேட்ட பொருள்களை வண்டி வண்டியாக அனுப்பி விடுகின்றார். இடையில் உள்ல ஐந்துகல் தொலைவைக் கடக்க நள்ளிரவே புறப்பட்டுவிடுகின்றார். இதைக் கவனித்த நாரதர் உடனே சேவல் உருக்கொண்டு சூரிய உதயத்தை அறிவித்துவிடுகின்றார். முகூர்த்தநேரம் தவறி விட்டதாகக் கருதி, தானுமாலயன் பெருத்த அவமானத் துடன் சுசீந்திரத்திற்குத் திரும்பிவிடுகின்றார். தாம் திரும்பிய இடமே இன்றும் 'வழுக்குப்பாறை' என வழங்கு கின்றது. இது சுசீந்திரத்திற்குக் கிழக்கே ஒருகல் தொலைவி லுள்ளது. இதில் சேவலின் கால் தடமும் தாணுமாலயனின் திருவடித் தடமும், காணப்படுகின்றன. இங்கனம் பகவதி . தானுமா லயன் திருமணம் தடைப்பட்டு விடுகின்றது; பகவதியின் தவம் தொடர்ந்து நடைபெறுகின்றது. அவளுக்கு வந்த பரிசப் பொருள்களான பொன்னும் மணியும் நெல்லும் கரும்புமே இன்று குமரிக்கரையில் பல நிற மணல் களாகவும் குன்றுகளாகவும் பரந்து கிடக்கின்றதாகக்கூறுவர். மாலை நேரக் கதிரவன் கடவில் குளிப்பதைக் கவனித்து விட்டுச் சுசீந்திரம் செல்லுகின்றோம். •:

சுசீந்திரம் : சுமார் மாலை ஏழுமணிக்குச் சுசீந்திரம்

அரசர் சத்திரத்தில் இடம் பிடித்து இரவு உணவு உட் கொள்ளுகின்றோம். இரவில் சத்திரத்தில் உறங்கும்போது