பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 நினைவுக் குமிழிகள்-2

தூங்குதிரை யாறு தவழ் சூழலது ஒர்குன்று." |மரன் - மரம்; ஓங்கி - உயரப்பெற்ற, குலாவும் - விளங்கு கின்ற; புடை - பக்கம்; தூங்குதிரை-மிக்க அலைகள்; சூழல் - சுற்றிடம்) என்று கம்பநாடன் காட்டும் சூழ்நிலை நமது நினைவிற்கு வருகின்றது. அகத்திய முனிவர் ஆசியுடன் வில்லும் வாளும் அம்பும் பெற்றுப் பஞ்சவடியை நோக்கி வரும் இராமனுக்குப் பஞ்சவடி அமைந்துள்ள சூழ்நிலையைக் காட்டுவது இப் பாடல். நாகர் கோவிலிலிருந்து சுமார் ஐம்பது கல் தொலைவி லுள்ள திருவனந்தபுரம் வரையிலும் இதே சூழ்நிலைதான். சில இடங்களில் பகலவன் கதிர்களும் உள்புகாநிலை. இக் காட்சிகளைக் கண்டுகளித்த வண்ணம் திருவனந்தபுரத்தை அடைகின்றோம்.

இருப்பூர்தி நிலையத்தருகிலுள்ள குமரன் விடுதி”யில் 3 அறைகன் வாங்கிக் கொள்கின்றோம். விடுதியின் வெளியில் சுற்றுப்புறச் சுவர்களின் அடங்கலுக்குள் உணவு தயாரிக்கவும் இசைவு பெறுகின்றோம். வேறு இடங்களில் அலைந்து இடம் பிடிக்க விரும்பவில்லை. மாலை மூன்று மணிக்கே வந்து விட்டதால் விரைவில் குளித்து அனந்தசயனச் சேவைக்குத் தயாராகின்றோம். அன்றிரவு சமையல் இல்லை. உணவு விடுதியில் உணவு கொண்டோம். அதனால் தம்புவையும் கூட்டிக் கொண்டு திருக்கோயிலுக்குப் புறப்படுகின்றோம். அரைகிலோ மீட்டர் நடைதான்: கோயிலை அடைந்து விடலாம். *

திருவனந்தபுரத் திருக்கோயிலும் ஒர் அழகிய சோலை சூழ்ந்த இடத்தில்தான் அமைந்துள்ளது. 'பெரியநீர் வேலை சூழ்ந்து, வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்தபுரம்'

3. கம்ப. ஆரணி - அகத். 57