பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 * நினைவுக் குமிழிகள்-2

போலும். முதவியார் கூர்த்த மதியுடைய வராதலால் இவர் களைப்பற்றி நன்கு அறிந்திருந்தார்; எடை போட்டும் வைத் திருந்தார் இவர்கள் நிர்வாகத்திலிருந்த உயர்நிலைத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் நிலை, சம்பளத் திட்டங் கள், கட்டட வசதிகள் ஆகியவைபற்றி நன்கு அறிந்திருந்த வராதலால் இவர்கட்கா உயர்நிலைப் பள்ளி என்று நினைத்து விட்டார். ஜமீந்தார்' என்ற பெயரிலோ, 'வழக்குரைஞர்கள்’ என்ற பதவியிலோ மயங்கவில்லை. அவர் தம் அநுபவத்தில் எத்தனை ஜமீந்தார்களைப் பார்த்திருப் பார்? எத்தனை வழக்குரைஞர்கள் நடத்தும் உயர்நிலைப் பள்ளிகளைக் கண்டிருப்பார்? எனவே, இவர்களது நிலை அவருடைய புதிர்க்கதிர்ப் பார்வைக்குத் (X-ray vision) தப்பவில்லை. -

நடுநிலைப் பள்ளித் திறக்கப்படும் போதே (1) ஒராண் டிற்குள் பள்ளிக்காகப் பத்தாயிரம் ரூபாய் வாங்கியில் போட வேண்டும் (2) பதிவுபெற்ற குழு ஒன்று அமைத்து அதன்கீழ்ப் பள்ளி நிர்வாகம் இயங்க வேண்டும். (3) மாணாக்கர்கள் விளையாடுவதற்கு ஐந்து ஏக்கர் பரப்புள்ள ஆடுகளம் Play ground) இருத்தல் வேண்டும் (4) அரசுத் திட்டப்படி ஆசிரியர்களின் சம்பளத் திட்டங்கள் அமைதல் வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்திருந்தது கல்வித்துறை. இவற்றுள் ஒன்று கூட நிறைவேற்றப்பெறாமல் உயர்நிலைப் பள்ளியாக வேண்டும் என்று நினைத்தால் அஃது எப்படிச் சாத்தியமாகும்? ஆகவே, நான்காவது படிவம் திறக்க இசைவு தரவில்லை. தவிர முறைப்படிக் காரணங்களைக் காட்டி விண்ணப்பமும் அனுப்பப்பெறவில்லை. ஆகவே (1942-43) இல் நான்காவது படிவம் இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. நான்காவது படிவம் திறக்க இசைவு கோரி அனுப்பிய விண்ணப்பம்பற்றிய தகவலைப் பின்னரே