பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் உள்ளம் 371

தமிழை வளர்த்து விட முடியாது. புதிய கருத்துகளை வெளி யிடலாம்; வெளியிட முடியும்; வெளியிடத்தான் வேண்டும். புரட்சிகரமான கருத்துகளையும் காரசாரமாக வெளியிட லாம். அவற்றை வெளியிடுவதற்குப் புதிய புதிய சொற்களை யும் சொற்றொடர்களையும் மொழிகளிலிருந்து கருத்துச் செல்வத்துடன் வேறு நாடு களிலிருந்து கலைச் செல்வங்களுடன், இன்றியமையாத சொற் செல்வத்தையும் கொண்டு சேர்த்து, தமிழ்மரபுக் கேற்பப் புதிய சொற்களையும் பிறப்பித்து நம் வீட்டுமொழி யின் கருவூலத்தைப் பெருக்கிக் கொள்ளலாம். ஆனால் தமிழின் பண்போடு கூடிய உயிராற்றலை உணர்ந்து எழுத வேண்டும்; பாடவேண்டும். அப்போதுதான்

கொண்டு வரலாம். வேறு

பழமைக்கும் பழமையான தமிழ் புதுமைக்கும் புதுமையாய் வளர்ந்தோங்க முடியும்.”

இத்தகைய இலக்கியப் பரப்பில் சங்க இலக்கியங்கள்தாம் ஆதிமைல் கல். இது முக்கியமானகல்லாகவும் உள்ளது. தமிழ்ப் பண்பையும் தமிழர் பண்பாட்டையுப் உள்ளவாறு உணர்ந்து கொள்வதற்குச் சங்க நூல்களை அறிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது. துறையூரில் நான் உலக ஊழியனார், இ லா ல் கு டி நடேசமுதலியார், பூ. ஆலாலசுந்தரம் செட்டியார், பு ரா. புருடோத்தம நாயுடு, டாக்டர் மு. வரதராசன், அ.மு. பரமசிவானந்தம், பன்மொழிப் புலவர் வே. வேங்கடராஜுலு ரெட்டியார், சி. இலக்கு வனார் இவர்களைக் கொண்டு ஏற்பாடு செய்த சிறப்புச் சொற்பொழிவுகள் என்னிடம் ஆராத் தமிழ்க் காதலை எழுப்பித் தமிழ் இலக்கியங்களைப் படிக்கத் தூண்டின. கவிராஜபண்டிதர் ஜகவீர பாண்டியனும், பாவேந்தர் பாரதி தாகனும் கூட துறையூருக்கு வந்து சிறப்புச் சொற்பொழி வாற்றினர். இவர்கள் பேச்சும் என்னுடைய அகத்தெழுச்சி யைத் துாண்டி விட்டது.