பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத நிகழ்ச்சி - 385

நூலைப் பலபல வாகச்

சமைத்து நொடிப் பொழுதும் வேலைத் தவறு நிகழாது

நல்ல வினைகள் செய்துன் கோலை மனமெனும் நாட்டின்

நிறுத்தல் குறியெனக்கே

எனக்கு வேண்டும் வரங்களை

இசைப்பேன் கேளாய்! கணபதி மனத்திற் சலன மில்லாமல்,

மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின்மவுன

நிலைவந் திடநீ செயல்வேண்டும், கனக்கும் செல்வம், நூறுவயது;

இவையும் தர நீ கடவாயே!” என்ற கணபதி தோத்திரப்பாடல்களுடன் இந்தக் குமிழி வெளிவருகின்றது. காரணம்,இந்தக் கணநாதன் காரைக்குடி சா. கணேசன் வடிவில் நான் எதிர்பாராததை வழங்கி என் வாழ்க்கைப் பாதையையே மாற்றியமைத்த நிகழ்ச்சி இதில் வெளிவருகின்றது.

1949.30 ஆண்டு இறுதியில் என் உயர்நிலைப் பள்ளி வாழ்க்கை நிறைவு பெறுகின்றது. 1948-ஆம் ஆண்டு என் நெருங்கிய நண்பர்களால் போடப்பெற்ற மொட்டை விண்ணப்பம் ஒராண்டு கழித்து செயற்படத் தொடங்கியது . பல்வேறு தொல்லைகள். இவற்றையெல்லாம் விவரமாக எழுத விருப்பம் இல்லை. இல்வாழ்க்கை சரியாக அமையாத கணவன்மார்கள் மனைவியை வெறுத்து, குடும்பத்தை

1. பா.க : வி.நா. மாலை - 6,7, நி-25