பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 - நினைவுக் குமிழிகள்-2

இந்த ஆண்டு (1943) பிப்பிரவரி வாக்கில் மீண்டும் கணபதி அய்யரைச் சந்தித்தேன். நான்காம் படிவம் (ஒன்பதாம் வகுப்பு) தொடங்குவதற்கான விண்ணப்பம் அனுப்பப் போவதாகத் தெரிவித்தேன். பத்தாயிரம் ரூபாயில் ஐந்தாயிரம் பாங்கியில் போட்டதையும் மீதி ஐயாயிரம் விரைவில் போடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள படுகின்றன என்பதையும் தெரிவித்தேன். பத்து ஏக்கர் நிலம் வாங்கிவிட்டதையும் சுட்டிக் காட்டினேன். பதிவு செய்யப் பெற்ற குழு (Registered body) அமைப்பதில் சிந்தித்து வருவதாகவும் குறிப்பிட்டேன். இந்தச் செய்திகளை அறிந்த அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இவற்றையெல்லாம், நினைந்து விண்ணப்ப நகல் தயாரிப்பதில் சில யோசனை களைச்சொன்னார். துறையூர் திரும்ப வந்து கணபதி அய்யர் சொன்ன யோசனைகளைத் தெரிவித்தேன். விரைவில் விண்ணப்ப நகல் தயாரித்துவருவதாகவும் தெரிவித்தேன். இதில் இவ்வளவு சிரமங்கள் இருப்பதை முதன் முதலாக இப் போதுதான் அறிந்தார் சின்னதுரை. பெருகிலக்கிழவர்' என்ற பெயரொளியில் ஒன்றும் நடைபெறாது; கடைப்பிடிக்க வேண்டிய நடை முறை வேறு என்பதை இப்போதுதான் அவர் புரிந்து கொண்டார்.

பள்ளித் தலைவர்கள் இருவரும் வழக்குரைஞர்கள்: குழு அமைக்கும் முறையை அவர்கள் அறிவார்கள் என்று நான் நினைத்திருந்தேன். சில பள்ளிகளை நெருங்கி நகல்கள்’ கொண்டுவருமாற் பணித்தபோதுதான் இவர்தம் சட்ட துணுக்கம் பெரிய வட்டம் என்பது எனக்குப் புரிந்தது. 'அறி தோறும் அறியாமை கண்டற்றால்’’ என்று வள்ளுவர் சொன்னார். நடைமுறைப் பள்ளி நிர்வாகத்தில் நாளாக நாளாக அநுபவம் வளர்வதையும், பல்லாண்டுகள் வழக்

2. குறள்-110 (புணர்ச்சி மகிழ்தல்)