பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நினைவுக் குமிழிகள்-2

Part II and Ill) போன்ற ஒரு சில நூல்கள் இத்தேர்வுக்கு உரியவை. நடைமுறையில் இவற்றிலுள்ள சில விதிகள் அநுபவத்தையொட்டி மாறிக்கொண்டே இருக்கும். அரசு @&god (Government Gazette) @th lom's possi, Qass வரும், இம்மாற்றங்கள் பற்றிய குறிப்புகளும் அரசு வெளியீடுகளாக அவ்வப்போது வெளியிடப்பெறும். ஓரணா, இரண்டனா என இவற்றின் விலைகள் அமைந்திருக் கும். அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் இந்த வெளியீடுகளை வாங்கி நூல்களிலுள்ள விதிகட்கு நேராக இம்மாற்ற விதிக் குறிப்புகளை கத்தரித்து ஒட்டிவைத்துக் கொள்வார்கள். புதியனவாக நூல்கள் வெளியிடப் பெறும் போது இம் மாற்றங்களையும் சேர்த்து வெளியிடப் பெறும்.

இத் தேர்வினை எழுதி வெற்றி பெறவேண்டும் என்ற உந்தல் என் மனத்தில் எழுந்தது. உரிய நூல்களில் கிடைத்த வற்றைச் சொந்தமாக வாங்கியும், கிடைக்காதவற்றை உள்ளுர் அரசு அலுவலகங்களில் பெற்றும் இத்தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். இத் தேர்வின் பழைய வினாத் தாள்கள், அவற்றிற்குரிய விடைகள், வேறு குறிப்பு கள் இந்த விவரங்களைக் கொண்ட ஒரு நூல் புத்தகச் சந்தை யில் கிடைத்தது. அதை வாங்கி வைத்துக் கொண்டு பயிலலானேன்.

இந்நிலையில் எம். கிருஷ்ணசாமி செட்டியார் என்பவர் (என்னோடு எல்.டி. பயின்று மீண்டும் நீதித்துறையில் எழுத்தராகவே பணியாற்றியவர்) துறையூர் மாவட்ட நீதி மன்றத்திற்கு மாற்றப்பெற் றிருந்தார். இவர் இத்தகைய தேர்வுகளை எல்லாம் எழுதி வெற்றி பெற்றவர். அரசுப் பணியிலிருந்ததால் இத் தேர்வின் பயனை அன்றாட அலுவலில் காண்பவர். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் மாலை நேரங்களில் பள்ளியை நோக்கி நடையாக வருபவர். அநுபவம் மிக்க இந்த அரசு அலுவலர்