பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 - நினைவுக் குமிழிகள்-2

இருவரும் பேசிக் கொண்டே சென்றோம்; ஒருவரை யொருவர் அறிமுகப் படுத்திக் கொண்டோம். சாம்பசிவம் பிள்ளை என்பது அவர் திருநாமம் என்பதை அறிந்து கொண்டேன். -

சா.பி. : ரெட்டியார், சட்டை அங்கவஸ்திரத்துடன் கிளம்பி விட்டீர்களே. அங்கு மிகவும் குளிருமே.

நான் : எனக்கு ஒன்றும் தெரியாது. அது மலை இருப் பிடம் என்பதையும் அறியேன். அப்படிப்பட்ட அநுபவம் எனக்கு இல்லை.

சா.பி. பரவாயில்லை; நான் நீங்கள் தங்க ஏற்பாடு செய்து விடுகிறேன். -

நான் : நான்காம் படிவம் திறப்பதற்கு ஆணை கோருவது பற்றி மண்டல ஆய்வாளர் வி. ஆர். அரங்கநாத முதலியார் கூனூரில் முகாம் அமைத்திருக்கின்றார் என்று கேள்வியுற்றேன். அவரைக் காணத்தான் போகிறேன்.

சா. பி : அப்படியே நானும் அவரைப் பார்க்கத்தான் போகிறேன். உங்களை இன்றிரவு 8.9 மணிக்குள் சந்திக்க வைக்கின்றேன். இரவு தங்கவும், உணவுக்கும் கூட ஏற்பாடு செய்கிறேன்.

நான் மிக்க நன்றி. தந்தை மாதிரியுள்ள தங்களிடம் இறைவன் என்னைச் சேர்த்தான். இப்படித்தான் திக் கற்றவர்கட்கு அவன் நல்லோரைக் கொண்டு ஏற்பாடு செய்துவிடுகின்றான்.

இப்படியாக உரையாடிச்கொண்டு மாலை 6 மணிக்குக் கனுரரை அடைந்தோம். பல தலைமையாசிரியர்கள் திரு. பிள்ளையவர்களைச் சந்தித்தார்கள். அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார் திரு. பிள்ளை. க்ாஃபி தருவிக்கப்பெற்றது; பருகினோம்.