பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுக் குமிழிகள்-3 & 2 ஒர் ஆய்வு தான் ராய. சொ. தலைமையில் அமராவதி புதுரர்-மகளிர் இல்லத்தில் நடைபெற்றது. சொ. முரு. தான் அரசு வக்கீல் நிலையிலிருந்து பாடல்களை அலசு வார்; சுண்டிப் பார்த்துப் போலிநாணயங்களை அகற்றுவது போல் செருகு கவிகளை இலேசாக இனம்கண்டு காட்டு வார். அக்கவிபற்றி ஆய்வு தொடங்கும். சரியான மணி களை ஏற்றுக் கொண்டு பதர்கள் காற்றில் விடுவதுபோல் செருகு கவிகள் என்று முடிவானவை தள்ளப்பெறும், தரங் குறைந்த-மட்டரகமான-பாடலுக்கு எடுத்துக்காட்டு இது. மகரதம் அனையவர் வரமும் வாழ்வும் ஒர் நிசரத கணைகளில் நீறு செய்யயாம் கசரத துரகமாக் கடல்கொள் காவலன் தசரதன் மதலையாய் வருதும் தாரணி -திருவவதாரம்-21 இது, திருமால் தாம்பரிவாரத்தோடு தசரதனுக்குப் புதல்வ னாய் வருவதாகக் கூறுவது. தசரதன்' என்ற சொல்லுக்கு எதுகை தயார் செய்யப் புலவர் எவ்வளவு அவதிப் பட்டிருக்கின்றார்? பாவம்! இந்த நகலுக்கு அசல் எப்படி யிருக்கின்றது என்பதையும் எடுத்துக்காட்டுவார் சொ. (, ; , - கயரதத் துரகமாக் கடலன், கல்வியன் தயரதன் எனும்பெயர்த் தனிச்சொல் நேமியான் புயல்பொழி தடக்கையான் புதல்வன்; பூங்கனை மயல்விளை மதனற்கும் வடிவு மேன்மையான் - காரிமுகம்-58 இந்தப் பாடலையும் மேலே காட்டிய பாடலையும் படித்துப் பார்த்தால் பாட்டு எது என்பது தெளிவாகும். இப்படிப் பல பாடல்களைப் பதர்களாக இருப்பவற்றைக் காட்டுவார்.