பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செருகு கவிகள் 83 ஒரு சமயம் ரசிகமணி டி.கே.சி. சொன்னது நினை விற்கு வருகின்றது. ஒரு கண்ணாடி கோப்பையில் இரண்டு மூன்று குலோப் ஜாமுன் உருண்டைகள் ஜீராவில் மூழ்கடிக்கப்பட்டு ஒரு கரண்டியும் அதில் வைக்கப் பெற்றுள்ளது. அத்துடன் குலோப் ஜாமுன் உருண்டை போல்-நிறம், அளவு பொருந்துமாறு-செய்யப் பெற்ற இரண்டு களிமண் உருண்டைகளும் கலந்து வைக்கப் பெற்றுள்ளன. உண்மையான குளோப் ஜாமுன் உருண்டை களைக் கரண்டியால் வெட்டி ஜீராவில் முக்கிக் கலந்து உண்கின்றார் ஒருவர்; அதுபவிக்கின்றார். களிமண் உருண்டையைக் கரண்டியால் வெட்டி ஜீராவில் கலந்து வாயில் வைக்கும்போது அவர் முகத்தைப் பார்க்க வேண்டுமே; அசடு வழிவதைக் காணலாம். மேற்காட்டிய திருவவதாரப் படலப் பாடலைப் படிக்கும்போது இந்த அநுபவம்தான் கிடைக்கும். இரண்டாவதாகவுள்ள கார்முகப் படலப் பாடலைப் படிக்கும்போது உண்மை யான குளோப் ஜாமுனை உண்பது போன்ற அநுபவம் முகத்தில் தென்படும். ரசிகமணி, ரசிகமணிதான் என்பது எவ்வளவு உண்மை. சொ. முரு.வும், ராய சொ.வும் இந்த டி.கே.சியின் உவமையைக் காட்டி எங்களை யெல்லாம் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவார்கள். சொ.முரு. அவர்கள் காட்டிய செருகு கவிகள் ஒன்றிரண்டைக் காட்டுவேன். 1. வாலிவதைப் படலத்தில் ஒன்று. வாலியை இராமன் அம்பெய்து வீழ்த்தி விடுகின்றான். அம்பு பட்டு வீழ்ந்தவன் இறக்கவில்லை. அம்பைப் பிடித்துக் கொள்ளு கின்றான். எப்படி?'கரம்இரண்டினும் வாலினும் காலினும் கழற்றிப் பரமன் இன்னவன் பெயர் அறிகுவன்’ (வாலி வதை-66) என அம்பைப் பற்றி இழுத்து வாங்கினான் மற்று.அவ் வாளியை யாளிபோல் வாலி (டிெ-67).