பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 நினைவுக் குமிழிகள்-3 காரைக்குடியில் தங்குவார். ஏராளமான கூட்டம் இருக்கும். சிறுவர்கட்கு வரும் பல நோய்கள் ஒவ்வாத உணவு வகை கள், தின்பண்ட வகைகள், இவற்றை உண்பதால் ஏற்படும் செரிமானம் இல்லாமை பற்றியே இருக்கும். இவ்வித வயிற்றுக் கோளாறுகட்கு நாட்டு மருத்துவத்தில் பல்வேறு குளிகைகள், சூரணங்கள் உள்ளன. இவற்றைத் தேனில் குழைத்துக் கொடுத்தால் விரைவில் நோய்கள் நீங்கிக் குணமாகும். காற்றின் மூலமாகவும், நீரின் மூலமா கவும் பரவும் நோய்களும் உள்ளன. இந்நோய்களையும் சூரணங்கள் போக்கும். பல நோய்கள் வந்து வந்து போனால் குழந்தையின் உடலிலும் நோய்களைத் தாங்கும் ஆற்றல் ஏற்படும். அக்காலத்தில் (1950 ஆண்டிற்கு ஒரு குழந்தைக்கு ரூ.25 வீதம் கட்டி விட்டால் மருத்துவரே வாரம் ஒரு முறையாவது குழந்தையைப்பார்த்துப் போகும் வழக்கமும் இருந்தது. பல குழந்தைகள் உள்ள பெரிய வீடுகளில் இந்தப் பழக்கம் நடைமுறையில் இருந்து வந்தது. காரைக்குடி மகர் நோன்பு அக்கிரகாரத்தில் (கல்லுக் கட்டிக்கு அருகில்) கோபால கிருஷ்ண அய்யர் என்ற நாட்டு மருத்துவர் ஒருவர் இருந்தார். இவர் தினமணி நிருபராக வும் பணியாற்றி வந்தார். மேற்படி அக்கிரகாரத்திலேயே வாடகைக்கார் நிலையமும் உள்ளது. காரைக்குடி சென்ற சில நாட்களில் கோபால கிருஷ்ணய்யரைப் பற்றிச் சிலர் சொல்லக் கேட்டு அறிந்து கொண்டேன். நல்லவர்; சாது வானவர்; சத்துவ குணம் மிக்கவர். இராமலிங்கத்திற்கு (பத்து வயது வரை) வயிற்றுக் கோளாறு ஏற்படும் போதெல்லாம் இவர் தரும் சூரணங்களாலேயே குண மாயிற்று. ஒரு தடவைக்குரிய மருந்து 10 பை, 15 பை மேல் இல்லை. 8 நாட்கள் சாப்பிடும்படி (நாளொன்றுக்கு மூன்று வேளை) தருவார்; ஒரு ரூபாய் ஒன்றரை ரூபாய்க்கு மேல் போகாது. நோயும் குணப்பட்டு விடும்.