பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106. _நினைவுக்குமிழிகள்-ச கனேசனை ஏகவசனத்தில் அன்பாக அழைப்பதைப் பார்த்திருக்கின்றேன். செட்டி நாட்டில் தேச பக்தி தலைதுாக்கி இருந்தது. மேற்குறிப்பிட்ட மூன்று இளைஞர்களும் தேசபக்தி மிக்க வர்கள்; தங்கள் வாழ்நாள் முழுதும் கதரைத் தவிர வேறு. ஆடைகள் அணிந்ததை நான் பார்த்ததில்லை. இவர்கள் மூவரும் சிறைவாசமும் செய்தவர்கள். 1942 புரட்சியின் போது சா. க. தலைமறைவாக இருந்தும் செயற்பட்டவர். வெள்ளையர் அரசு இவரைப் பிடிக்க எவ்வளவோ முயன்றும் அவர்கள் பிடியில் இவர் அகப்படாமல் தாடி வளர்த்துக்கொண்டு பல்வேறு மாறு வே ட ங் க ளி ல், இருப்பார்: அற்புதமாகச் செயற்படுவார். தேவக்கோட்டை திதிமன்றம் தீக்கிரையானதில் இவர் பங்கு உண்டு என்று மக்கள் பேசிக் கொள்வதை நான் கேட்டிருக்கின்றேன். தேசபக்தியுடன் இந்த இளைஞர்கள் சமயப் பற்றும் மிக்க வர்கள். இவர்கள் எல்லோருக்கும் மலேயா, சிங்கப்பூர், பினாங்கு. ஈப்போ முதலிய அயல்நாட்டுத் தொடர்புகளும் இருந்துள்ளன. இவர்களுள் ராய. சொ. சிறந்த கவிஞர். காந்தி பிள்ளைத் தமிழ் இவர் பாடிய நூல்களுள் ஒன்று. இவர்களின் பல்வேறு தொண்டுகளைப் பற்றிப் பாரதியார், பலநூல்கள் பதிப்பித்தும், பலபெரியோர் பிரசங்கம் பண்ணு வித்தும் நலமுடைய கலாசாலை புத்தகசா லைபலவும் நாட்டி யுந்தம் குலமுயர நகருயர நாடுயர உழைக்கின்றார் கோடி மேன்மை நிலவுறஇச் சங்கத்தார் பல்லுழி வாழ்த்தொளிர்க நிலத்தின் மீதே (7): என்று. போற்றியுள்ளார்.

  • : « - ர். இச்சங்கத்தின் ஆண்டுவிழாவில் தமிழ்த் தென்றல் திரு .

..வி.க. போன்ற சான்றோர்கள்