பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_i 36 நினைவுக் குமிழிகள்-3 கொண்டிருக்கலாம். உயர்நிலைப் பள்ளியில் பையன் கதர் ஆடையை மட்டிலும் அணிவான். இவன் எல்லாப் பெரி யோர்களின் கொள்கைகளைப் பின்பற்றுபவன்போல் தோன்றுகின்றது. இப்போதுதான் வந்து சேர்ந்தான். இந்த ஆண்டு முழுவதும் கவனித்தால் இவனை நன்கு அளந்து காணலாம்’ என்றேன். அன்றியும் நாம் உண்ட வீடு யாருடையது என்று கூட எனக்குத் தெரியாது. வீட்டில் யாரும் இல்லை. கல்யாணச் சந்தடியும் இல்லை’ என்று மேலும் தொடர்ந்தேன். பையன் தெய்வபக்தி யுள்ளவன். பெரியாரிடம் போகாமல் உங்களை நாடினதே எனக்குப் பரமதிருப்தி என்றேன். கம்பனடிப் பொடியும் மொத்தத்தில் பையன் நல்லவனாகக் காணப் படுகின்றான். எந்தக் கட்சியில் சேர்ந்தவனாக இருந்தால் நமக்கென்ன?’ என்று கூறிவிட்டார். மணி 3-45 க்கு வண்டி புதுக்கோட்டையை அடைந்தது. காஃபி மட்டிலும் தருவித்துப் பருகினோம், பின்னர் வண்டி கிளம்பியது. மாலை ஐந்து - மணிக்கு வண்டி காரைக்குடியை அடைந்தது. வாடகைக் கார் ஒன்றில் கற்பக நிலையம் (சா.க. வீடு) வந்து சேர்ந் தோம். ९ இந்த இடத்தில் ஒன்று சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது. வாழ்க்கை முழுதும் காங்கிரசுக்கே உழைத்த இந்தப் பெருமகனுக்கு தேர்தலுக்கு நிற்க கட்சி இசைவு தரவில்லை. சுயேட்சையாக நின்று 2000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றார். ஆனால் தி.மு.க. ஆட்சியில் இவருடைய நாட்டுப் பற்று, தமிழ்ப் பற்று, பொதுத்தொண்டு, தூய்மையான உள்ளம் இவற்றைப் பாராட்டுமுகத்தான் சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியளித்தார் அண்ணாத்துரை. தமிழ் அன்னைத் திருக்கோயில், கம்பன் மணி மண்டபம் இவற்றை எழுப்பு வதற்கு ஒல்லும் வகையெல்லாம் உதவினார் அண்ணா.