பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றக்குடி அடிகளார் - 129 பேச்சு இருக்கும். பேசவிரும்புபவர் ; பேச்சுக் கலையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பேரவாவினர். கோயில் விழாக்களிலெல்லாம் பேசுவார். இந்து மதாபிமான சங்கத்திலும் பேசியுள்ளார். காலத்திற் கொவ்வாத பல மடத்துச் சம்பிரதாயங் களை உதறித் தள்ளிவிட்டுப் பொதுமக்களிடம் எளிதாகப் பழகியதால் இவர் புகழ் எங்கும் பரவியது. மடத்திலும் L# #) விழாக்களை நடத்துவார்; திருப்புத்துரிலும் விழாக்கள் இவர் ஆதரவில் நடைபெறும். குரு பூசைக்கு அழைப்பு அனுப்புவார். அறிஞர்கள், புலவர்கள், பேராசிரியர்கள் எல்லாம் இவருக்கு நன்கு அறிமுக மானார்கள். தந்தை பெரியார்க.ட இவர்பால் ஈர்க்கப் பெற்றார். இருவரும் நெருங்கிப் பழகினர்; ஈடுபாட்டுடன் பழகினர். அடியேன்பாலும் அடிகளார் மிக்க அன்புடை யவர். தமிழறிவைவிட என்னுடைய அறிவியலறிவுக்கு மிக்க மதிப்பு தருபவர். என்னுடைய அறிவியல் நூல்களை மிகவும் பாராட்டிப் பேசுவார். அடிகளை நினைக்கும் போது இரண்டு மூன்று நிகழ்ச்சிகள் நினைவிற்கு வருகின்றது. (1) ஒரு சமயம் குன்றக்குடிக்குக் குரு பூசைக்காகச் சென்றிருந்தேன். பெரும் புலவர்கள், அறிஞர்கள், பேராசிரியர்கள், வணிகர்கள் முதலியோர் வந்திருந்தனர். பண்டித மணி கதிரேசன் செட்டியார், புலவர் கோவிந்தசாமிப் பிள்ளை, டாக்டர் B. நடராசன், சா. கணேசன், கா. காடப்பச் செட்டியார், வேறு தன. வணிகப் பெருமக்கள் முதலியோர் வந்திருந்தனர். மலையை வலம் வருதல் முற்பகல் தொடங்கியது. எல்லோரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். இவர் களுள் தருமபுரம், திருப்பனந்தாள் முதலிய ஆதீனப் புலவர்களும் சென்று கொண்டிருந்தனர். பொதுவாக ஆதீனப் புலவர்கள் இம்மாதிரியான குருபூசை நிகழ்ச்சி களில் கலந்து கொள்ளும் போது ‘ஆதீனப் புலவர்' என்ப நி-9