பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றக்குடி அடிகளார் # 3 1 நாயனார் வாழ்வில் ஒரு முத்திநாதன் தோன்றவில்லையா? இங்ங்ணமே அருள்நெறித் திருக்கூட்டத்திலும் சில 'ஆஷாடபூதிகள் நுழைந்து விட்டதில் வியப்பொன்றும் இல்லை . மடத்துப் பணியாளர்களிலும் இத்தகைய கயவர்கள் சிவ வேடத்துடன் புகுந்து விட்டனர்; இதனால் அடிகளாரின் உண்மைத் தொண்டர்கள் இக்கூட்டத்தை 'அருள்நெறித் திரு(ட்டு}க் கூட்டம்’ என்று கிண்டலாகவும் மறைமுகமாகவும் பேசத் தொடங்கினர். இது அடிகளாரின் செவிக்கும் எட்டி அவர் தூய்மையான உள்ளத்தை வருத்தி இருக்க வேண்டும்... இது தவிர, சில அன்பர்கள் அடிகளாரை ஞான சம்பந்தப் பெருமானின் மறு பிறப்பு என்று கூட பேசத் தொடங்கினர்; புகழ் மாலையும் சூட்டத் தொடங்கினர். மிகைப்படுத்திப் பேசுதல், புகழ்தல்களும் தாழ்த்திப் 'பேசுதல் இகழ்தல்களும் மொழி கற்றுள்ள மனித உள்ளத் தில் இயல்பாகத் தோன்றும் பண்புகள். வைணவத்தில் சிறப்பு கருதி வடகலையார் வேதாந்த தேசிகரையும், தென்கலையார் மணவாள மாமுனிகளையும் இராமா துசரின் மறு பிறப்பு’ என்று புகழக் கேட்டிருக்கின்றேன். இரு பெரியார்களின் அறிவு, ஒழுக்கம், பக்தி, புலமை ஆகியவை இங்ங்னம் பேசச் செய்ததில் வியப்பொன்றும் இல்லை.) இத்தகைய புகழ் மாலை அடிகளாரைப் பற்றி எழத் த்ொடங்கியதும் என் கெழுதகை நண்பர் எம். எஸ். சண்முகம் (அக்காலத்தில் தமிழ்நாடு’ என்ற இதழின் துணை ஆசிரியர்), ஞானசம்பந்தப் பெருமான் காலத் தில் சமணர்கள் அந்த ஞானக் குழந்தையை எதிர்த்து ஒழிந்தனர். இப்போது அவர்கள் மறுபிறப்பு எடுத்து மடத்து ஊழியர்களாகவும், அருள் நெறித் திருக்கூட்டத் தில் முத்தி நாதர்களாகவும் அடிகளாரை ஒழித்துக் கட்டவே நுழைந்துள்ளார்கள். ஆகவே அடிகளார் விழிப்புடன் செயற்படுவது நல்லது' என்ற எச்சரிக்கையும் விடுத்தார்.இது நகைச்சுவையை எழுப்பக் கூடியதாயினும்,