பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# செட்டிக்குளத் திருத்தலப் பயணம் 躍35 1955 இல் பங்குனி மாதத்தில் இப்பயணத்தை மேற் கொண்டேன். செட்டிகுளம் என்ற ஊர் திருச்சி மாவட்டம் பெரம்பலூர் வட்டத்தில் உள்ளது; ஊர் சிற்றுார் அன்று; நகரமும் அன்று நடுத்தரமான ஊர். பெரம் பலூரிலிருந்தும் திருச்சியிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. ஊரை யடுத்துக் கீழ்த் தசையில் சுமார் 2 கி. மீ. தொலைவில் உள்ள ஒரு குன்றின் மீது குமரன் கோயில் கொண்டுள்ளான். இந்தக் குமரனுக்கு என் அன்னையார் தனக்கு ஒரு பேரன் வாய்த்தால் அவனை வெள்ளிக் காவடி எடுக்கச் செய்து ஒரு மூட்டை அரிசியை அமுதாக்கி உறவினர், ஏழைகள் இவர்கட்குச் சம ஆராதனை செய்வ தாக நேர்ந்து கொண்டார். இந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றவே இந்த ஏற்பாடு. காரைக்குடியில் ஐம்பது ரூபாய் எடையில் ஒரு வெள்ளிக் காவடி தயார் செய்து கொண்டேன். கோட்டாத்துரர் நல்லப்பரெட்டியாருக்கு எழுதி 2 மூட்டை நெல் வேக வைத்து புழுங்கல் அரிசி தயாரிக்கச் செய்தேன். அதற்கு வேண்டிய மளிகை சாமான்கள், பாத்திரங்கள், இலைக்கட்டு இவற்றை வண்டியில் கொணர்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்ன தாகவே என் தாயாரைக் கோட்டாத்துரருக்கு அனுப்பி னேன். ஒரு குறிப்பிட்ட நாளில் சாமான்கள், சமையல் ஆட்களுடன் செட்டி குளம் மலைக் கருகிலுள்ள ஒரு தோப்பை வந்தடைந்தன. நானும் என் மனைவியும் குழந்தைகளுடன் மூன்று நாட் களுக்கு முன்னதாகவே புறப்பட்டு இருப்பூர்தி, பேருந்து மூலம் செட்டிக்குளம் வந்தோம். திரு தியாகராச ரெட்டியார் வீட்டில் (எலுமிச்சை தோட்டக்காரர் வீடு; ஒரு நாள் தங்கினோம். செட்டிகுளத்துக்கு 3 கல் தொலைவிலுள்ள பெரகம்பி என்ற ஊரில் இருக்கும் என் தாய் மாமனை (அம்மான்) பார்ப்பதற்காகவே மூன்று நாள் முன்னதாகப் புறப்பட்டு வந்தேன். குதிரை வண்டி அமர்த்திக்கொண்டு பெரகம்பி சென்றோம். இராமலிங்