பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறிரு தடந்தோள் வாழ்க: அறுமுகம் வாழ்க: வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க; குக்குடம் வாழ்க, செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க: யானைதன் அணங்கு வாழ்க, மாறிலா வள்ளி வாழ்க; வாழ்கசீர் அடியார் எல்லாம் என்ற கச்சியப்பரின் வாழ்த்துப் பாடல்களுடன் இக்குமிழி நிறைவு பெறுகின்றது; அடங்குகின்றது. குமிழி-123 17. பலபல பள்ளிகள் இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்; இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்; அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்; ஆல யம்பதி னாயிரம் நாட்டல்: பின்ன ருள்ள தருமங்கள் யாவும் பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்; அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்!! என்று கல்வித் தொண்டு பற்றிக் கூறினான் பாரதி. வள்ளல் அழகப்பர் பாரதியின் இதயத்தை நன்கு அறிந் தவர். ஆகவே, கல்வித் தொண்டில் தம் கருத்தைச் செலுத்தினார். ஓர் அரசு செய்ய வேண்டிய பணியைத் 1. பா. க : தோத்திரப் பாடல்கள்-வெள்ளத் தாமரை - 9. -