பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140° -- - - - நினைவுக் குமிழிகள்-3 நல்ல கல்வி கற்று நல்ல நல்ல வேலையில் அமர்ந்ததை நேரில் கண்டு மகிழ்ந்தேன்: நான் காரைக்குடியில் பணியாற்றிய போது சேலம் தகராண்மைக் கல்லூரியில் திரு. வீ. உலக ஊழியனார் தமிழ்ப் பேராசிரியராக இருந்தார்; இவர் என்னை நன்கு அறிந்தவர். துறையூரில் நான் இருந்தபோது நல்ல பழக்கம். இவர் வீ. முனியாண்டி என்பவருக்கு ஒர் அறிமுகக் கடிதம் கொடுத்து அனுப்பியிருந்தார். திரு. முனியாண்டி ஓவிய ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பித் திருந்தார். நான் அவருக்கு உதவக்கூடுமா? என்று கேட் டிருந்தார். ஒரு பெரிய நிர்வாகத்தின்கீழ்ப் பணி புரிபவ னால் என்ன செய்ய முடியும்? திரு. முனியாண்டிக்கு எல்லாத் தகுதியும் இருந்தமையால் அவருக்குப் பதவி கிடைத்தது. பள்ளிப் பணியில் திறமையிருந்ததைத் தவிர வேறு திறமைகளையும் வளர்த்துக் கொண்டிருந்தார். அணுவின் ஆக்கம், இல்லற நெறி, கவிதை அநுபவம், என்ற எனது மூன்று நூல்கட்கும் நூற்றுக்கு மேற்பட்ட அச்சுக் கட்டைகள் (Blocks) தயாரிப்பதற்கேற்றவாறு கறுப்பு மையில் அழகான ஒவியங்கள் வரைந்து தந்து உதவினார். இந்த மூன்று நூல்களும் இன்றளவும் (இருபத்தைந்து ண்டுகளாகப்) புகழுடன் நூல் உலகில் நடமாடுகின்றன.

  • శ్రీ

மலையாளத் தலைமையாசிரியர் முதல் இரண்டு ஆண்டுகள் தாம் பணியாற்றினார். இந்தப் பணி அவரால் தாக்குப் பிடிக்க மு: யாமையால் விலகிக் கொண்டார். இவர் இருந்தஇடத்தில் கீழச்சீவல் பட்டி உயர்நிலைப்பள்ளி யில் தலைமையாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த திரு எஸ். இராகவாச்சாரி, நியமிக்கப்பெற்றார். இவர் புவியியவில் (Geography) முதுகலைப் பட்டம் பெற்றிருந் தார். இவர் மிகத் திறமைசாலி. மிகச் சிறப்பாகத்தான் பணியாற்றினார். என்ன காரணத்தாலோ மூன்று ஆண்டு கட்குமேல் இவர் நிலைக்கவில்லை. கும்பகோணத்திலுள்ள gag a utigâsoave, usirefăcă.ă (Town High school)