பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலபல பள்ளிகள் 141 தலைமையாசிரியராகப் போய் விட்டார். கும்பகோணம் தமது சொந்த ஊராக இருக்கலாம். அல்லது பயிற்சிக் கல்லூரியில் இடம் கிடைக்குமா? என்ற நோக்கத்துடனும் வந்திருக்கலாம். கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்பத னால் விலகிக் கொண்டிருக்கலாம். இவர் எல்லோருடனும் நன்றாகத்தான் பழகுவார். ஆயினும், சக ஆசிரியர் களுடன் ஒத்துப் போகும் பண்பு இவரிடம் அமைய வில்லையோ என்ற ஐயம் என்பால் இருந்து கொண் டுள்ளது. இவரையடுத்துத் தேவகோட்டையில்உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்த மகாகணபதி அய்யர் தலைமையாசிரியராக நியமனம் பெற்றார். இவர் வந்த பிறகு ஆசிரியர் அரசியல்' உருவாகி அதன் அலை பயிற்சிக் கல்லூரியையும் தாக்கியது; பிறகு அந்த அலை பயனற்று அடங்கிப் போயிற்று. இவர் ஓய்வு பெற்ற பிறகு தருமநாராயணன் செட்டியார் மகன் (தத்துப் பிள்ளை) தலைமையாசிரியரானார். அதன் பிறகு பள்ளியின் வரலாறு எனக்கு எட்டவில்லை . என் அரிய நண்பர் முனியாண்டி (ஓவிய ஆசிரியர்) மறைந்த செய்தி மட்டிலும் எனக்கு எட்டியது. துறையூர் பக்கம் பஞ்சாயத்து அலுவலராக இருந்த கருப்பண்ணன் என்பவரை பி.டி. வகுப்பில் சேர்த்துக் கொள்ளுமாறு பரிந்துரைத்தார் துறையூர் வழக்குரைஞர் திரு. பா. அரங்கசாமி ரெட்டியார். இடம் வாங்கித் தந் தேன். பின்னர் பட்டமும் பெற்றார். இறையருளால் என் பரிந்துரை பலித்ததால் மாதிரி உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியருமானார். நான் திருப்பதி செல்லும் ஒன்றிரண்டு ஆண்டுகட்கு முன்னரே நான் ஏதோ உதவவில்லை என்று நினைத்துக் கொண்டு என்னிடம் பழகுவதை நிறுத்திக் கொண்டார்.நான் திருப்பதியிலிருந்து ஆறாண்டு கள் காரைக்குடிக்கு வருவதும் போவதுமாக இருந்தேன். அப்போது நான் மிதி வண்டியில் போகும் போது அவரும் எதிரில் மிதிவண்டியில் வருவார். பாராமுகமாக ஒதுங்கிப்