பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் கல்விப் பணி 五57° பணியாற்றுபவர்கட்கு இவை என்றும் சிந்தனை விருந்தாக அமையும். எடுத்துக் காட்டாக விளையாட்டு முறைபற்றி வில்லர், ஹெர்பர்ட் ஸ்பென்சர், மேலிபிரான்சி, கார்ல் குருஸ், ஸ்டாலின் ஹால், ஜேம்ஸ்ராஸ் (உளவியல் அறிஞர்) போன்றவர்களின் கருத்துகள் நம்மைச் சிந்திக்க வைக்கும். ஆண்டவனே அலகிலா விளையாட்டுடையராக இருந்து உலகைப் படைத்தல் என்ற இலக்கியச் சான்று சுவை பயக்கும். இக் கருத்துக்களை விளக்கும் முறைகள் அநுபவத்தில் கண்ட கற்றல் அடிப்படையில் அமைந்த பல வித விளையாட்டுக்கள் இந்நூலில் இடம் பெறச் செய் துள்ளேன். எ-டு அந்நியனைக் கண்டுபிடி, கரும்பலகை ஒட்டம் பயணம் செய்தல் போன்றவை சுவையானவை: இந்த நூலில் மாணவர்கள் தனியாகக் கற்கவும், குழு வாகக் கற்கவும், உள்ள கற்கும் (கற்பிக்கும்) முறைகள் பாகுபடுத்திக் காட்டப் பெற்றுள்ளன . பயிற்றலில் மேற்கொள்ளும் உத்திகள் பல வகைப் படும். ஒவ்வோர் ஆசிரியரும் தத்தம் ஊகத்திற்கேற்பவும் பலவகை உத்தி முறைகளைக் கையாளுகின்றனர். இவற்றின் மூலம் தம் பயிற்றலுக்குச் சுவையும் கவர்ச்சியும் ஊட்டுவர், இவற்றை வாய்மொழி வினாக்கள், விளக்கம் தருதல், துணைக்கருவிகள், வீட்டுவேலை என்ற நான்கு தலைப்புகளில் காட்டியுள்ளேன். கற்பித்தலில் வாய்மொழி வினாக்கள் பல்வேறு விதமாகப் பயன்படுகின்றன. வினாக்களைத் தக்க முறையில் கையாளுதலில் இளம் ஆசிரியர்கள் நல்ல பயிற்சியைப் பெறுதல் வேண்டும். இந்த உத்திதான் ஆசிரியரையும் மாணாக்கர்களையும் மனநிலை யில் ஒன்றாகப் பிணைக்கின்றது. (வினாக்களை விடுக்கும் திறன் கைவரப் பெற்ற ஆசிரியர்கள் ஒரளவு கற்பிப்பதில் வல்லுநராக இருப்பர் என்று கூறலாம். ஆனால், வினாக் 1. தமிழ் பயிற்றும் முறை : பக். 89, 90 (மூன்றாம் பதிப்பு) காண்க.