பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 நினைவுக் குமிழிகன்-3 பரிந்துரையின் பேரில் எஸ். ஆர். சுப்பிரமணியபிள்ளை இதை மனமுவந்து ஏற்றுக்கொண்டு வெளியிட்டார்.சா.க வின் உதவி இல்லாவிடில் இந்தப் பெரிய நூல் வெளி வந்திருக்க முடியாது. இந்த நூலுக்கு முன்னாள் கல்வி அமைச்சர் திரு. தி.சு. அவினாசிலிங்கம் அணிந்துரை நல்கி யுள்ளார். இதைவாங்குவதற்குக் கோவை பெரிய நாய்க்கன் பாளையம் இராமகிருஷ்ண வித்தியாலயத்திற்கு முன்னறி விப்புடன் சென்றிருந்தேன். கோவையில் விடுதியொன்றில் குளியல் சிற்றுண்டி இவற்றை முடித்துக் கொண்டு வித்தியாலயம் சென்றேன். ஐயா அவர்களைச் சந்தித்து வணக்கம் செலுத்தினேன். எனக்கு விருந்தினர் இல்லத்தில் இடம் ஒதுக்கி வைத்திருப்பதாகவும் அங்குத் தங்கலாம் என்றும் கூறினார். நான் அனைத்தையும் கோவையிலேயே முடித்துக் கொண்டு விட்டதாகக் கூறினேன். பத்து மணித்துளிகளில் அணிந்துரை தருவதற்குத் தயாரானார், ரெட்டியார், நூலைப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. பெரிதாக எழுதி விட்டீர்கள். ஒன்று செய்ய லாம். நீங்கள் என்னை உங்கள் மாணவனாக நினைத்துக் கொண்டு ஒவ்வொரு இயலாக எனக்கு விளக்குங்கள். ஒரு மணிநேரம் இது நடைபெறட்டும். அதன் பிறகு எழுதித் தருகின்றேன்' என்றார். முற்பகல் 10க் மணி தொடங்கி 11 மணிக்குள் விளக்கத்தை முடித்தேன். உடனே முக்கால் மணிநேரத்தில் விரைவாக நான்கு பக்கங்களில் எழுதி முடித்து, ரெட்டியார், எழுத்துப் பிழைகள், வாக்கியப் பிழைகள் இருப்பின் திருத்திப் போட்டுக் கொள்ளுங்கள்' என்று கூறி அணிந்துரையை என்னிடம் தந்துவிட்டார். உணவு விடுதிக்கு ஒர் ஆள் மூலம் என்னை அனுப்பி உணவு கொள்ளச் செய்தார். திரும்பியதும் பயிற்சிக் கல்லூரி முதல்வர்.உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர் பயிற்சிப் பள்ளித் தலைமை ஆசிரியர் இவர்கள் தயாராக வந்திருந்தனர். அன்பர்களே. இன்று