பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் அடி ப்பொடி - - # 69. புகழுடன் திகழ்கின்றன என்பது என் நம்பிக்கை. நூல் களைப் பொறுத்தமட்டிலும் இவர்தம் திருக்கை இராசியான கை என்பது என் கணிப்பு. ஊரில் நடைபெறும் எல்லாத் திருவிழாக்களிலும் இவர் பங்கு உண்டு. சுவாமியின் திருமேனியை வாகனங்களில் ஏற்றி அலங்காரம் செய்வதில் அருகிலிருந்தே ஒவ்வொரு செயலையும் கவனித்துச் கலையுணர்ச்சியுடன் குறிப்பு களைத் தந்து செம்மைப்படுத்துபவர். சீவகனை நந்தட்டன் முதலிய எட்டு நண்பர்கள் சூழ்ந்து கொண்டிருப்பதுபோல, .பல தன வைசிய இளைஞர்களும், பிற வகுப்பு இளைஞர் களும் இவரைச் சூழ்ந்த வண்ணம் இருப்பர்; ஏவல் கேட்டு நிற்பர். இவர்களும் இவர்களைப் போன்ற எண்ணற்ற வர்கள் இவருடைய வீர வழிப்பாட்டுக்குரியவர்கள். மார்கழி மாத பஜனையில் முன்னின்று முக்கிய பங்கு கொள்வார். இத்தகைய பேரறிஞரை, பொதுவாழ்வுக் காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவரை, வள்ளல் டாக்டர் அழகப்பர் தாம் ஏற்படுத்திய அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவராக நியமித்தார். கல்லூரிகளின் வளர்ச்சியில் சா. கணேசனின் பங்கு மகத்தானது என்பதை வள்ளலே நன்கு அறிந்தார். பொது மக்களும் ஆசிரியர்களும் மாணாக்கர்களும் நன்கு அறிந்திருந்தனர். இவர் கை காட்டிப் பிழைத்தவர்கள், மேன்மைக்கு வந்த வர்கள், முன்னேற்றப் பாதையில் நடைபோடுபவர்கள் இவரை நன்றியுடன் நினைத்துப் போற்றுவர். நடமாடும் கணேசப் பெருமான் என்றே புகழ் மாலைகள் சூட்டுவர். ஒருநாள் சனியன்று மாலையில் நான் இவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, ரெட்டியார் அவர்களே, நாளை சிற்றுண்டிக்குப் பிறகு பிள்ளையார் பட்டிக்கு போவோம்; பிள்ளையாரை வழிபட்டு அவன் ஆசி பெறுவோம். தயாராக காலை எட்டு மணிக்கு வந்து விடுங்கள்’’ என்று திடீர் உத்தரவு போட்டார். நடமாடும் கணேசன் துப்புஆர் திருமேனி தும்பிக்கையான் பாதம்’