பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 நினைவுக் குமிழிகள்-3 பணிவதற்கு அழைக்கின்றார் என்றே கருதினேன். அவர் கருத்துப்படி அவருடன் பிள்ளையார் பட்டிக்குப் போகத் தயாரானேன். என்னை வெளியிடங்களுக்கு இட்டுச் சென்று நற்பயன்கள் பெறச் செய்தவர்கள் இருவர். ஒருவர், சா. கணேசன், மற்றொருவர் ராய.சொ. இந்த இரு பெரியார்களையும் இன்றும்-ஏன்? என்றும்-என் வாழ்நாள் உள்ளவரை நன்றியுடன் போற்றுவேன். காலை 8-30 மணிக்குப் பேருந்தில் சா.க.வும் நானும் பிள்ளையார் பட்டி புறப்பட்டோம். குன்றக்குடியைக் கடந்து திருப்புத்துனர் செல்லும் சாலையில் பிள்ளையார் பட்டி என்ற அறிவிப்புப் பலகை காட்டும் இடத்தில் இறங்கி, 100 கெஜதுாரம் நடந்து பிள்ளையார் பட்டி என்ற ஊரை அடைந்தோம். பிள்ளையார் பட்டி ஒரு சிறிய ஊர். ஊருக்கு நடுவில் கோயிலும் குளமும் உள்ளன. குளத்தைச் சுற்றி அகன்ற வீதிகள். என்னை அழைத்துக் கொண்டு. கோயிலைச் சுற்றிக் காட்டி சா. க. சொன்னார்: நரசிம்மவர்மன் காலத்தில் உருவான குடைவரைக் கோயிலை மூலக்கோயிலாகக் கொண்டு இந்தக் கோயில் விரிந்து வளர்ந்துள்ளது. இப்படி விரிந்த கோயில்தான், இன்று மகா மண்டபம், இராச கோபுரம் முதலியவற்றுடன் பெருங் கோயிலாகத் திகழ்கின்றது. இக்கோயிலில் இடம் கொண்டிருப்பவர்தான் மருதங்குடி நாயனார். இத் திருக்கோயிலை விரிவாகவும் அழகாகவும் கட்டி முடித்தவர்கள் நாட்டுக் கோட்டை நகரத்தார். இத் திருக்கோயிலைக் கட்டியும், கோயிலுக்கு முன் ஒரு திருக் குளத்தை வெட்டியும். இவற்றைச் சுற்றிலும் நல்ல நல்ல விடுதிகளையும் அமைத்துத் தக்க முறையில் பாதுக்ாத்து 1. பிள்ளையார் பொறிக்கப்பெறுவதற்கு முன் இவ்வூர் ஈக்காட்டுர், மருதங்குடி, திருவீங்கைக்குடி என்று வழங்கப் பெற்றது. பிள்ளையார் வந்த பிறகு இவ்வூர் பிள்ளையார் பட்டி என்று வழங்கப் பெறுவதாயிற்று.