பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந ைகவணிகர்களின் தொடர்பு 要登莎 விற்பனையைக் கணக்கிற்குக் கொண்டுவராத முறை. இவற்றால் அரசு அதிகாரிகட்குக் கையூட்டு வழங்குதல் இப்படிப் பல தில்லுமுல்லுகள் நடை முறைக்கு வந்துள்ளன. வைரச் சாமான்கள் விற்பனை மிக இரகசியமாக நடைபெறும். இதை எப்படியும் தரகர்கள் தெரிந்து கொள்வார்கள். முதவில் வாங்குவோர் சாமானைச் சரிபார்த்துக் கொண்ட பிறகு, வாங்குவோரும் (தர கர் விற்போரும் இவரும் ஒரு தரகரே) துணியால் தம் கைகளைப் போர்த்திக் கொண்டு விலையை விரல்களால் பேசி முடிப்பார். சாமானுக்கு உரியவருக்குக் கொடுக்கும் தொகை போக இலாபத்தை அங்குக் குழுமி இருக்கும் பிற தரகர்களும் தரகு பெறுவார்கள், இந்த வாணிகத்தில் எந்தவித சம்பந்தமும் இல்லாத தரகர்கட்கும் கர் தொகை கிடைப்பது அதிசயத்திலும் அதிசயமாக இருக்கின்றதல்லவா? வைர வாணிகத்தில் மட்டிலும் இந்த மரபு இன்றும் இருந்து வருகின்றது. நான் நேரில் இத்தகைய பல நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கின்றேன். இத் வைரத்தைச் சோதித்துப் பார்ப்பதே ஒரு கலை. to: இதற்கு விக்க அதுபவம் வேண்டும். இதில் கரும் புள்ளிகள் இருக்குமாம். உருப்பெருக்கியில்தான் தென்படுமாம், அதுபவசாலிகள்தாம் இவற்றைக் கண்டறிய முடியும். சில நகரத்தார் பெரும் புள்ளிகளே இவற்றை நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர். ராய, சித, அவர்கள் வைரங்களைச் சோதித்தறிவதில் வல்லுநர் என்று கடைத் தெருவில் பலர் பேசக் கேட்டுள்ளேன். அப்படித்தானா?” என்று அவரைக் கேட்டதற்கு , ஏதோ தெரியும்; ஏமாறாத அளவுக்குத் தெரியும்’ என்று மிக அடக்கமாகச் சொன்னார். இப்படிப் பல விஷயங்களைத் தெரிந்து கொண்ட பிறகு, MSR. நீங்கள் இனி வைரச் சாமான் களே வாங்க மாட்டீர்கள். இதில் ஏமாந்து போவதற்கும்,