பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு Y- சொக்கலிங்கம் பிள்ளை 2] I இரண்டாண்டு கழிந்து (1956) ஆண்டு எனக் கருது கின்றேன்) மீண்டும் ஒரு புயல் எழுந்தது. இவர் வாழ்வில். பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்னர் இவரை விட்டுப் பிரிந்து சென்ற இவர் மனைவி ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தாள். இவரது மனைவியின் தந்தையார் ஒரு செட்டி வீட்டுக் கணக்கப்பிள்ளை, நீதி மன்ற வழக்கு களை நன்கு அறிந்தவர். மருமகனிடம் சுரப்பு இருக்கின்ற தென்பதை நன்கு அறிந்து கொஞ்சம் கறந்து பார்க்கலாம் என்பது அவரது நினைப்பு. நோட்டீஸ் கண்டதும் இவர் நடு நடுங்கிப் போனார். தான் இவரை மணந்து கொண்ட போது கட்டில், மெத்தை, பீரோ, மேசை, நாற்காலி முதலியவை கொண்டு வந்ததாகவும் அவை இவர் பொறுப்பில் இருப்பதாகவும், முப்பது சவரன் மதிப்புள்ள நகை வகையறா இவர் வசத்திலிருப்பதாகவும், இவற்றைத் தம் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும்; இவை தவிர மாதம் ஜீவனாம்சத்திற்கு ரூ 150/- தரவேண்டும் என்றும், தவறினால் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இவற்றைப் பெற நடவடிக்கைகள் எடுக்கப் போவதாகவும் நோட்டிவில் குறிப்பிடப்பெற்றிருந்தது. தம்பியின் இல்லத்தில் உணவு கொண்டு அமைதியாகப் பள்ளிப் பணியில் ஈடுபட்டு வாழ்ந்து வரும் தன் துறவு வாழ்க்கை யில் ஒரு புயல் எழுந்தது போன்ற அச்சம் கிளர்ந் தெழுந்தது இவரிடம். நோட்டிசை எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தார்; இதில் எப்படியாவது தனக்கு உதவ வேண்டும் என்று வேண்டினார். நான் யோசித்தேன். திருச்சி வக்கீல் பி. அரங்கசாமி ரெட்டியாரைக் கலந்து பேசி இதற்கு வழி வகைகளைக் காணலாம் என்று அவருக்குக் கடிதம் எழுதினேன். இந்த வக்கீல் நண்பர் சதா வெளியூர்ப் பயணத்தில் இருப்பதால், இவர் திருச்சியில் இருக்கும் நாள் குறிப்பிட்டு எழுதினால் நானும் சொக்கலிங்கம் பிள்ளையும் அந்த நாளில் வருவ தாக எழுதினேன். எங்கள் வருகை ஒரு ஜீவனாம்சம்