பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 நினைவுக்குமிழிகள்-3 போய் விட்டதாகவும், என்னை நேரில் வந்து உதவும் படியும் கடிதம் எழுதியிருந்தார். நானும் நண்பருக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணத்தால் உந்தப்பெற்றுத் துறையூர் சென்றேன் (4 நாள் விடுமுறையில்). நான் சென்ற போது தொழிலை நிறுத்திவிட்டு திருச்சி செ று ஏதோ ஒரு கடையில் சம்பளத்திற்காக அமர்வது என்று முடிவு செய்திருந்தார். கடைத் தெரு பக்கத்தில் சொந்தமாக ஒரு வீடு இருந்தது. பத்தாயிர ரூபாய்க்கு என்னை வாங்கிக் கொள்ளச் சொன்னார். ஊரை விட்டுப் போன பிறகு எனக்கு வீடு வாங்க விருப்ப மில்லை என்று சொல்லி விட்டேன். நான் கடைக்குச் சென்ற போது பத்துப் பதினைந்து பேர் கூடிவிட்டார்கள், கோபாலகிருஷ்ணன் என்னைத் தனியாக உள்ளே அழைத்துச் சென்று, இவர்கள் யாவரும் நல்லெண்ணம் இல்லாதவர்கள்; என்மீது பொறாமை கொள்பவர்கள். இந்தக் கடையிலுள்ள சாமான்கள் அனைத்தையும் ஸ்டாண்டுகள் உட்பட ரூ. 750|= கேட்கின்றார்கள் பாவிகள்!' என்று அழாத குறையாகச் சொன்னார். நான் என் நண்பரின் நிலையையும், அக்கம்பக்கத்துச் சூழ்நிலையையும் புரிந்து கொண்டேன். நான் சென்ற நேரம் மாலை 4 மணி , கூடியிருந்த கடைத்தெருப் பெருமக்களிடம் நாளை காலை 9 மணிக்கு கடையிலுள்ள சாமான்களை ஏலம் போடப் போகின்றேன். தேவையானவர்கள் உடனே ரொக்கம் கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம்’ என்று கூறினேன். அவர்கள் கடையினுள் நுழைந்து சாமான் களைப் பரிசோதித்து மதிப்பிட்டுக் கொண்டார்கள். இரவு எட்டு மணிக்கு உணவினை முடித்துக் கொண்டு கடைக்குள் நானும் நண்பரும் நுழைந்து சாமான்களை மதிப்பிட்டுக் கொண்டோம், ரூ. 5000 = தந்து யாராவது கேட்டால் அப்படியே கொடுத்துவிடலாம் என்றும், அப்படி யாரும் முன் வராவிட்டால் பொருள்களைத்