பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடனில் சிக்கிய நண்பரைக் காத்தல் 2 # 9 வேலையில் அமர்வதாகவும் வீட்டை விரைவில் விற்கப் போவதாகவும் கூறினார். தானும் ரூ.1250; = உடன் அவரிடம் விடை பெற்றுக் கொண்டேன். அன்றிரவே திருச்சி வந்து இராமேஸ்வரம் பாசஞ்சர் வண்டியைப் பிடித்துக் காரைக்குடி வந்து சேர்ந்தேன். நண்பருக்கு உதவியது எனக்கு முழு மன நிறைவினைத் தந்தது. சில ஆண்டுகள் கழித்து திருச்சியில் கோபால கிருஷ்ணனைச் சந்தித்தபோது தான் திருச்சியில் ஒரு பெரிய கடையில் மாதச்சம்சளம் 300} = க்கு வேலை பார்ப்பதாகவும் தன் தம்பி தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித் தார். மிகவும் வருந்தினேன். குமிழி-133 26. என் மாமனார் பரமபதித்தல் இது 1955-இல் நிகழ்ந்தது என்பதாக நினைவு. பரமபதித்த செய்தி கடிதம் மூலம் அறிந்தேன். 1944முதல் என் மாமியார் மகள் ஆதரவில் என்னோடு வாழ்ந் தார். ஒரு சமயம் வயிற்றுப் போக்கினால் தொல்லைப் பட்டார். முடிந்து விடுவார் என்று நினைத்தேன்; தப்பித்துக் கொண்டார். காரைக்குடியில் இரண்டாண்டு தங்கியிருந்த பொழுதும் ஒருமுறை அதே வயிற்றுப் போக்கால் தொல்லைப்பட்டார். இப்பொழுதும் தப்பித்துக் கொண்டார். மகனுடன் இருக்க வேண்டும்’ என்று எண்ணு" கின்றார் என்பதைக் குறிப்பினால் அறிந்து கொண்டேன். நான் என் மனைவியைக்கலந்து கொண்டு ஆலத்துடையாம் பட்டியில் என் மனைவியின் அத்தை மகன் கிருஷ்ணசாமி ரெட்டியார் இல்லத்தில் கொண்டு போய் விட்டுத் திரும்பி