பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழைக்கு உதவியது &多莎 முயல்வதாகத் தெரிகின்றது. உன் முயற்சி அதில் வேண்டா என்று சொல்லி, ஐந்தரை மணிக்கு என் வீட்டுக்கு வா, ஒரு முக்கியமான வேலை உள்ளது. அஃது உன்னால்தான் முடியும், தவறாமல் வா' என்று மேலும் கூறினேன். மாலை ஆறு மணிக்கு என் வீடு வந்தார் ஆறுமுகம் பிள்ளை. உணவு விடுதிப் பையன் முயல்வதற்கு முன்பே முதல்வரைப் பார்த்துக் கேட்டிருந்தால் அவ்வேலை எளி தாகக் கிட்டுவதற்கு வாய்ப்புண்டு முதல்வரும் உனக்காக உதவுவார். நானும் பரிந்துரைப்பேன். இப்போது முயல்வது நம் ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. சா. க. தலையிட்டால் நடை பெறும். நீ முயலும் போது அவர் மனநிலை (Mood) சரியாக இருக்கவேண்டும். சரியில்லாத நிலையில் இருந்து நீ உதவும்படி கேட்டால் ' என்னப்பா, ஆறுமுகம், நின் குடும்பம் முழுவதற்கும் நீ உதவும்படி கேட்கின்றாயா? என்று சீறவும் கூடும். இந்த வேலை காலியிருப்பதே அவருக்குத் தெரியாது. இதனால் அவர் யாருக்கும் பரிந்துரைக்கவில்லை என்பது தெளிவு, இப் போது நீ முயலும்போது மேற்கூறியவாறு சீறிவிட்டு வேறுயாராவது ஒருவருக்குத் தரும்படியும் செய்யலாம்’ ’ என்று கூறி அவரை நேராக அணுகாதே' என்றும் அறிவுரை கூறினேன். அடுத்து, நடராஜா சினிமா கொட்டகையருகில் முடி அலங்காரம் செய்யும் கடைவைத்திருக்கும் நாவிதரை (பெயர் நினைவில்லை) நீ அறிவாய். உன் வீட்டுக்குப் பக்கத்தில்தானே இருக்கின்றார்? அவர் காங்கிரஸ் தியாகி, சா. க. வுக்கு மிகவும் வேண்டியவர். அவர் மூலம் முயலுக, அவர் போகும்போது நீ கூடப் போகாதே, அவர் தனியாக முயலட்டும்.’’ என்று அறிவுரை கூறினேன். மேலும் அவர் முயலும்போது, பையன் மிகவும் நல்லவன். பள்ளியிறுதித் தேர்வில் வெற்றி பெற்றவன். என் கடையருகில் அவன் இருப்பதால் அவனைப் பற்றி நான் நி-15 -