பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笼基懿 நினைவுக் குமிழிகள்-3 வரும் பொழுதெல்லாம் இவரைச் சந்தித்துப் பேசுவதில் தவறுவதில்லை. இந்தக் காலப்பகுதியில் இ.ம. சங்கத்தில் ஆயுள் உறுப்பினரானேன். (4) டாக்டர் வர்க்கீஸ் யோசனையைப் பின்பற்றிய தால் தமிழ்கடலுக்கு வயது திரும்பி விட்டது. சிவன் கோயில், பெருமாள் கோயில் சிறப்பு நிகழ்ச்சிகளில் அதிக அக்கறையுடன் ஈடுபட்டார். ஒரு டிசம்பர்-ஜனவரி விடு முறையில் காரைக்குடி சென்றிருந்த பொழுது பெருமாள் கோயிலில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி யில் கலந்து கொண்டேன். சில தனவைசிய இளைஞர் களின் துணையால் ராய. சொ. வின் ஈடுபாட்டைக் கண் குளிரக் கண்டு மகிழ்ந்தேன். இன்னொரு சமயம் செப்டம்பர் விடுமுறைக்குச் சென்றிருந்தபொழுது நவராத்திரி விழா நடந்து கொண்டிருந்தது. விசயதசமி யன்று மகர்நோன்பு பொட்டலில் (காந்தி சதுக்கம் என்பது புதிய பெயர்) ஐந்து சுவாமிகள் (கோயிலூர், காரைக்குடியில் சிவன் கோயில், பெருமாள் கோயில், கொப்புடிையம்மன் கோயில், கிருட்டிணன் கோயில்): பொட்டலில் வந்து அம்புபோடும். விசயதசமி அன்று சற்று மேகம் மூட்டம் காணப்பட்டது, மழை பெய்யும் என்ற அச்சுறுத்தல் காணப்பட்டது. சுவாமிகள் நனையக் கூடாது என்பதற்கு ராய. சொ. தார்பாய்க்காக - அலைந்தது இன்றும் (1989 செப்டம்பர்) என் நினைவில் பசுமையாக உள்ளது. அப்போது நான் ரெங்கூன் ஹாலில் உட்கார்ந்திருந்: தேன். ராய. சொ. வும் வேறு இரண்டு இளைஞர்களும் கடைக்குள் நுழைந்து அக்கடை முதலாளி கப்பிரமணிய முதலியாரிடம் தர்ப்பாயைப்பற்றி விசாரித்தனர். எப். பொழுதும் அரைக்கை கதர் சட்டை, நாலு முழக்கதர் வேட்டியுடன் காணப்படும் ராய. சொ. அன்று வெண் பட்டு அணிந்திருந்தார்; வெண்பட்டு ஜிப்பா. அவர் திரு.