பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க்கடல் ராய. சொ. --- -- 24t மேனியை அலங்கரித்தது. கழுத்தில் தங்கத்தால் கட்டப் பட்ட சிறிய அக்கமணிமாலை திகழ்ந்தது. என்றுமில்லாத முகப்பொலிவுடனும் கவர்ச்சியுடனும் அன்று காணப் பட்டார். உடனே எனக்கு மதுரைச் சங்கத் தலைவர் சொக்கலிங்கப் பெருமான் நினைவிற்கு வந்தார், அதை வாய் திறந்து சொல்லியே விட்டேன். இன்று தான் நம் தமிழ்க் கடல் ராய. சொ. மதுரைச் சொக்க விங்கப் பெருமான் போல் காட்சியளிக்கின்றார்' என்று சொன்னபோது அனைவருமே மகிழ்ந்தனர். ராய. சொ. வின் குமிழ்சிரிப்பு அவர் கொண்ட புதிய கோலத் திருமேனிக்கு மேலும் பொலிவை நல்கியது. எல்லோருமே என்னையும் பாராட்டினர். - (5) காரைக்குடி அழகப்பரின் அறம் இவரை அழகப்பா கல்லூரியில் தமிழ்த் துறையில் ஒர் ஆய்வுத் துறையும் உண்டாக்கி அதில் மூன்றாண்டுகள் இயக்குநர் பதவியும் தந்தது. அவர் தங்குவதற்கு கல்லூரி வளாகத்திலேயே ஒரு நல்ல வீடும் தந்தது. மூன்றாண்டுகள் ஒரு சமையல் காரனை நியமித்துக் கொண்டு மிகவும் செளகரியமாக வாழ்ந்து வந்தார். முதுமைக் காலத்தில் ராய. சொ. வுக்குத் தாளாளர் CW.C.T.V. வேங்கடாசலம் செட்டியார் இந்தப் பொறுப்பை நல்கிப் பாராட்டியது. பொன் எழுத்துகளால் பொறிக்கப்பெற வேண்டிய தொன்று. இவர் கல்லூரியில் வளாகத்தில் வாழ்ந்து வந்தபோது காலையில் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு இவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். சிவபூசையில் ஈடு பட்டிருந்ததைக் கண்டு மகிழ்ந்திருந்தேன். இவர் லிங்கத் திற்கு அருச்சனை செய்த மஞ்சள் நிறமுள்ள மலர்களைச் சமையல் ஆள் பொறுக்கிச் சேர்த்து சிறிது எண்ணெய் விட்டுப் பொறித்துச் சிற்றுண்டியோடு பரிமாறினான். இம்மலர் இதய நோயைத் தீர்க்கும் என்று சொன்னார் ராய. சொ. மலரின் பெயர் கூடச் சொன்னார். அதை இப்போது நினைவு கூர முடியவில்லை. இந்தச் சமயத்தில் Ho-1 & -