பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 நினைவுக் குமிழிகள் 3 இவர் இல்லத்திற்குப் பின்புறம் குடியிருந்த இரா. பதும் நாபன் (அழகப்பர் பொறியியற் கல்லூரி முதல்வரின் தனி அலுவலர் வந்து சேர்ந்தார்; இவர் ராய. சொ வுடன் நெருங்கிப் பழகுபவர்; தமிழ் ஆர்வலர். கவிதை இயற்றும் திறமையுடையவர். இவருடனும் சிறிது நேரம் உரையாடினேன். பின்னர் அடுத்த தெருவில் குடியிருந்த க.தேசிகன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்) என்பாரையும் சந்தித்து உரையாடி விட்டு பதினொரு மணி சுமாருக்கு இல்லம் திரும்பினேன். தேசிகன் வைணவ இலக்கியங்களில் ஆழங்கால் பட்டவர். சிறந்த கவிஞர். நான் காரைக் குடியில் பணியாற்றிய போது நெருங்கிப் பழகியதுண்டு. (5) 1966-சனவரியில் என் அரிய நண்பர் கி. சீநிவாசவரதன் (திருவேங்கடவன் பல்கலைக்கழகம் கீழ்த்திசை ஆராய்ச்சித் துறையில் பணியாற்றினவர்) அவர்களின் துணை கொண்டு காஞ்சியிலுள்ள பதிநான்கு திவ்விய தேசங்கள், அந்நகரிலிருந்து 7 கல் தொலைவி லுள்ள திருப்புட்குழி, மாமல்லைத் தலசயனம், திருவிட si : எந்தை, திருநீர்மலை ஆகிய 18 திவ்விய தேசங்களைச் சேவித்தேன். காஞ்சியில் அட்டபுயகர்த்து எம் பெருமானைச் சேவித்துக்கொண்டு திருக்கோவிலை விட்டு வெளிவரும் போது ராய. சொ., CW. C T. W. வேங்கடாசலம் செட்டியார் ஆகிய இருவரையும் வேறு ஒன்றிரண்டு நண்பர்களையும் சந்தித்தேன். இருவரும் எல்லா வசதிகளும் கொண்ட ஒரு சிற்றுத்தில் (Wall) தமிழ கத்தின் சிவ, திருமால் ஆலயங்களைச் சேவித்து வருவ தாகச் சொன்னார்கள். நாங்கள் சென்றபோது, அட்ட புயகரத்தில் 'பகல்பத்து-இராப்பத்து உற்சவம் நடை பெற்ற காலமாக இருந்தது. பெரும்பாலான தலங்களைச் சேவித்த பிறகு ராய. சொ. திருத்தலப் பயணம்’ என்ற தலைப்பில் நூலொன்றை CW. C T. W. வேங்கடாசலம் ச்ெட்டியாரின் மணிவிழா மலராக வெளியிட்டுள்ளார். அந்த நூலைப் பர்ரிநிலையத்தில் எப்போதோ ஒரு முறை