பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க்கடல் ராய. சொ. 243 பார்த்ததாக நினைவுண்டு. சுருக்கமாகத் தாங்கள் சேவித்த நாள், இறைவன்-இறைவி பெயர்கள், அத்தலம் இருக்கும் இடம், பதிகத்தின் ஒரு முக்கியமான பாசுரம் இவற்றைக் கொண்டிருந்ததாக நினைவு. 1971-இல் வெளி வந்த மலை நாட்டுத் திருப்பதிகள்’ என்ற நூலை மட்டிலும் ராய. சொ. அவர்கட்குத் தந்ததாக நினைவு. அதன் பின்னர் வெளி வந்த ஐந்து நூல்களையும் அவர் கட்குத் தரவில்லை. நான் திருப்பதியிலிருந்த பொழுதே ராய. சொ. வும். CW. C T. W. வேங்கடாசலம் செட்டியாரும் திருநாடு அலங்கரித்து விட்டார்கள். இனி அவர்களை வைகுந்தத்திலோ, கைலாயத்திலோ சந்திக்கும் பேறு கிடைக்கும் எனக் கருதுகின்றேன். {7) ராய. சொ. பெருங்கவிஞர். காந்தி பிள்ளைத் தமிழ், காந்தி கலித்துறை அந்தாதிகளையும், காதல் பாட்டு (தொகுப்பு) என்ற கவிதை நூல்களையும் குற்றாலவளம் என்ற உரை நடை நூலையும் (கட்டுரைத் தொகுப்பு) இயற்றியுள்ளார்கள். இந்த நினைவுக் குமிழி வெளிவரும்போது காதல் பாட்டு குற்றாலவளம்: என்ற இரண்டு நூல்கள் மட்டிலும் என்னிடம் இருந்தன. காதல் பாட்டு அகப்பொருள் இலக்கியத்தில் பல துறைகளை விளக்குவதாக அமைந்துள்ளது. இதில் தாம் இயற்றிய காந்தி கவித்துறை அந்தாதியிலுள்ள பல பாடல்களையும் சேர்த்துள்ளார். பிரிவு ஆற்றாமைத் துறையில் ஒரு பாடல் : பெண்ணர சே! என் பிரிவுக்கு இரங்கல் பெருமையல; கண்ணொளி யே! உயர் காந்தி களத்தில் கலந்திடவே எண்ணிஉ ளேன்; நான் வரும்வரை நீ, நம் இனித்த தமிழ் நண்ணும் இலக்கியத் தேன்குடித்து ஆறுக நாயகியே! * .